ஜியோ மார்ட்டில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்க உள்ளது. இதில் எக்கச்சக்கக வீட்டு உபயோகப் பொருட்கள், எலெகட்ரானிக்ஸ் என பலவற்றிற்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய குடியரசு தினம் வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் https://www.jiomart.com/ ஜியோ மார்ட்டில் Republic Sale 2023 என்ற சிறப்பு தள்ளுபடி ஆஃபர் விற்பனை நடைபெற உள்ளது. ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கி, வரும் 26 ஆம் தேதி வரையில் இந்த விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின்களின் விலை சுமார் 6X00 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 80 சதவீத ஆஃபர், 99 ரூபாயிலிருந்து டி-சர்ட்டுகள், இயர்பட்ஜ் ஆடியோ பொருட்களுக்கு 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லைஃப்ஸ்டைல் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80 சதவீதம் வரையில் ஆஃபர்கள் உள்ளன. டிவி வகைகள் 5,499 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. FM ரேடியோ, சரிகம, ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ கேட்ஜெட்டுகளுக்கு 80 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. லேப்டாப்புகளுக்கு 40 சதவீதம் வரையில் ஆஃபர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டரா? இன்ஸ்டாகிராமா? வாக்கெடுப்பு நடத்திய எலான் மஸ்க்! அதிர்ச்சி முடிவுகள்!!
மேலும், குழந்தை பராமரிப்பு பொருட்கள், சமையல் பாத்திரங்கள் கடாய் வகைகள் ஆகியவற்றுக்கு 80 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. ஆடை வகைகள், பலசரக்கு பொருட்கள், திண்பண்ட வகைகள், ஸ்டேஷனரி பொருட்கள், ஸ்மார்ட்போன்கள் என பலவற்றிற்கும் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.
இந்த ஆஃபரில் ரிலையன்ஸ் ஷாப்பிங்கில் பெற்ற லாயல்டி புள்ளிகளைப் பயன்படுத்தி கூடுதல் விலைகுறைப்பு செய்யலாம். வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான ஆஃபர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆஃபர் ஜனவரி 26 ஆம் தேதி வரையிலும், ஸ்டாக் உள்ள வரையிலும் அமலில் இருக்கும்.