இந்தியாவில் 5ஜி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐபோன் பயனர்களுக்கு டிசம்பர் வரையில் 5ஜி சேவை கிடைக்காது என்று தகவல்கள் வந்துள்ளன.
இந்தியாவில் ஏர்டெல் 5ஜி அமலுக்கு வந்து 10 நாட்கள் ஆகிவிட்டன. ஏர்டெல் நிறுவனம் முதற்கட்டமாக 5ஜி சேவையை டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் அமல்படுத்தியுள்ளது.
மற்ற எல்லா ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி வேலைசெய்யும் நிலையில், ஆப்பிள் ஐபோன்களில் 5ஜி வேலைசெய்யவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அதிகமான 5ஜி பேண்டுகளை ஐபோன்களில் தான் உள்ளது. இருப்பினும் அவற்றில் ஒன்றில் கூட 5ஜி கிடைக்கவில்லை.
undefined
இதனால், ஐபோன் பயனர்கள் தங்களுக்கு 5ஜி கிடைக்கவில்லை என்று புகாரளித்தனர். இதனையடுத்து, ஏர்டெல் நிறுவனம் தங்கள் தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது, அதன்முடிவில் ஏர்டெலில் சிக்கல் இல்லை என்றும், ஆப்பிள் ஐபோனில் 5ஜிக்கான சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டும் என்று தெரிவித்தது.
5G இருந்தும் பிரயோஜனம் இல்லை.. குமுறும் iPhone வாடிக்கையாளர்கள்.. Airtel விளக்கம்!
இந்த நிலையில், ஏர்டெலும் ஆப்பிள் நிறுவனமும் 5ஜி சாப்ட்வேர் அப்டேட் குறித்து ஆலோசிக்க உள்ளது. 5ஜி சேவையைப் பெறுவதற்கான சாப்ட்வேர் அப்டேட் செய்வதற்கு ஒரு வாரம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், டிசம்பர் வரையில் கூட ஆகலாம் என்றும் ஒருசில தளங்களில் தகவல்கள் வந்துள்ளன.
இதேபோல் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி சேவை கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விரைவில் இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Jio True 5G: அது என்ன True 5G? அசர வைக்கும் அம்சங்கள்..
ஜியோ கூட சோதனை முயற்சியில் தான் 5ஜி அமல்படுத்தியுள்ளது. ஆனால், ஏர்டெல் 8 நகரங்களில் 5ஜியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. எனவே, சென்னை உட்பட 8 நகரங்களில் உள்ள ஐபோன் பயனர்கள் 5ஜி சேவை கிடைக்காமல் கவலையில் உள்ளனர்.