
இந்தியாவில் தயாராகும் ஆப்பிள் ஐ போன்....!!! தயாரிப்பு பணிகள் மும்முரம் .....!!!
ஸ்மார்ட் போன் தயாரிப்பில், பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தற்போது, ஐ போன் தயாரிப்பில் மிகவும் மும்முரமாக இறங்கியுள்ளது.
இந்தியாவை பொருத்தவரை, ஆப்பிள் ஐ போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த பின்பு, பலரும் தங்களிடமிருந்த , கணக்கில் வராத பணத்தில் , விலை உயர்ந்த பல பொருட்களை வாங்கி குவித்தனர்.அதில் ஆப்பிள் ஐ போனும் ஒன்று. இதனால், முன்னதாக முன்பதிவு செய்திருந்த பலருக்கும் , ஐ போன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தியாவில் உற்பத்தி எங்கு நடக்க உள்ளது....?
தற்போது, ஐ போனுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், ஆப்பிள் நிறுவனம் ஐ போன் தயாரிப்பில் மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தற்போது, ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி பிரதமர் நரேந்திர மோடியுடன், கடந்த மே மாதத்தில் , இந்தியாவில் ஆப்பிள் ஐ போன் தயாரிப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, பெங்களூர் மற்றும் பீன்யா இந்த இரண்டு இடத்திலும் , ஐ போன் தயாரிப்பு வரும் ஆண்டு 2017 ஏப்ரல் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தயாரிப்பு பணியில் பாக்ஸ்கான்.....!!!
இதனிடையே , ஆப்பிள் நிறுவனத்துடன் , ஐ போன் உற்பத்தியில் கைகோர்த்துள்ள பாக்ஸ்கான் நிறுவனம், தற்போது தயாரிப்பு பணிக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம் தேடி வருகிறது.மேலும், பாக்ஸ்கான் நிறுவனம், ஆப்பிள் நிறுவனம் தவிர்த்து , OnePlus and Xiaomi உள்ளிட்ட நிறுவனத்துடன் இணைந்து, ஸ்மார்ட் போன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் மத்திய அரசும், சீன தயாரிப்பு ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தயாரிக்க ஆர்வம் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.