வாட்ஸ்அப் வாய்ஸ் நோட் - சத்தமின்றி உருவாகும் புது அப்டேட்..! எதற்கு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Mar 18, 2022, 10:43 AM IST

வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பர்க்கப்பட்டு வந்த அம்சம் ஒருவழியாக வழங்கப்பட்டு விட்டது. 


உலகம் முழுக்க அதிக பயனர்களை கொண்டு மிகவும் பிரபலமான குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. உலகளாவிய பயனர்களை கொண்டிருக்கும் வாட்ஸ்அப் தொடர்ந்து செயலியில் புது அம்சங்களை வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் வழங்குவதற்கான புதிய அம்சங்கள் முதலில் செயலியின் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்படும். இதைத் தொடர்ந்து புது அம்சம் சீராக இயங்கும் போது, அனைவருக்கமான ஸ்டேபில் வெர்ஷனில் புது அம்சம் வழங்கப்படும்.

அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் வரும் நீண்ட வாய்ஸ் நோட்களை இனி எந்த ஒரு இடைவெளியும் இன்றி கேட்க புது அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய வெர்ஷன்களில் வாய்ஸ் நோட் கேட்கும் போது, மற்ற குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க வாய்ஸ் நோட்களை பாஸ் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. மேலும் மற்ற செயலிகளை திறக்கும் போது வாய்ஸ் நோட் தானாக நின்று போகும். எனினும், வாட்ஸ்அப் செயலியினுள் மற்ற அம்சங்களை பயன்படுத்தும் போது வாய்ஸ் நோட் தொடர்ச்சியாக இயங்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

புதிய வாட்ஸ்அப் பீட்டா செயலியில் குளோவல் வாய்ஸ் நோட் பிளேயர் இடம்பெற்று இருக்கிறது. இது செயலியில் என்ன செய்யும்? புது அம்சம் கொண்டு வாய்ஸ் நோட்களை கேட்கும் போதே, மற்ற குறுந்தகவல்களை வாசிப்பது மற்றும் அவற்றுக்கு பதில் அனுப்ப முடியும். இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். தளத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்தது. ஆண்ட்ராய்டில் வழங்கும் முன் பல அம்சங்கள் இதே போன்று ஐ.ஓ.எஸ். தளத்தில் முன் கூட்டியே வெளியிடப்பட்டு இருக்கின்றன. இது இரு தளங்களிலும் வாடிக்கையான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் நோட் அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புது அப்டேட் நிச்சயம் பெரும் நிம்மதியை வழங்கும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. புதிய குளோவல் வாய்ஸ் நோட் பிளேயர் ஸ்கிரீனின் மேல்புறத்தில் இடம்பெற்று இருக்கும். இதில் வாய்ஸ் நோட் பிளே ஆகும் போது, எந்த இடையூறும் இன்றி மற்ற செயல்களை தொடர்ச்சியாக ஈடுபட முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.7.21 வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது.

வாய்ஸ் நோட் பிளேயர் மட்டுமின்றி வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு செயலியில் வழங்க மேலும் சில புதிய அம்சங்களை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. முதற்கட்டமாக பீட்டா வெர்ஷில் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய குளோபல் வாய்ஸ் நோட் பிளேயர், வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் வெர்ஷில் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், பீட்டா வெர்ஷனை தொடர்ந்து விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம். 

click me!