அமேசான் வலைதளத்தில் வயர்டு ஹெட்போன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் அதிக சலுகை கொண்ட மால்களை தொடர்ந்து பார்ப்போம்.
அமேசான் வலைதளத்தில் வயர்டு ஹெட்போன் மாடல்களுக்கு அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் பலர் ட்ரூ வயர்லெஸ் ஹெட்போன் வாங்க விரும்பும் நிலையில், அமேசான் வலைதளத்தில் வயர்டு ஹெட்போன் மாடல்களுக்கு அதிகபட்சம் 79 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஹெட்போன் மாடல்களுக்கு அதிகளவு தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு வழங்கப்படுகிறது.
பிடிரான், அம்பிரேன், ரியல்மி, போல்ட் என பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹெட்போன் விற்பனையாளர்கள் எனலாம். அந்த வகையில், அமேசான் சிறப்பு விற்பனையில் ரூ. 500 மற்றும் அதை விட குறைந்த விலையில் கிடைக்கும் வயர்டு ஹெட்போன் மாடல்கள் பற்றி பார்ப்போம்.
ஜெப்ரானிக்ஸ் ஜெப் ப்ரோ:
வழக்கமாக ரூ. 499 விலையில் விற்பனை செய்யப்படும் ஜெப்ரானிக்ஸ் ஜெப் ப்ரோ ஹெட்போன் அமேசான் விற்பனையில் தற்போது ரூ. 149 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹெட்போன் மாடலுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது.
போட் பாஸ்ஹெட்ஸ் 152:
போட் பாஸ்ஹெட்ஸ் 152 மாடலுக்கு அமேசான் வலைதளத்தில் 61 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஹெட்போன் தற்போது ரூ,. 499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ரூ. 1,290 விலையில் விற்பனை செய்யப்படு வந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிரான் பிரைட் லைட்:
பிடிரான் பிரைட் லைட் HBE மாடலுக்கு 78 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஹெட்போனை தற்போது ரூ. 899 விலையில் வாங்கிட முடியும்.
அம்ப்ரேன் ஸ்ட்ரிங்ஸ் 38:
அம்ப்ரேன் ஸ்ட்ரிங்ஸ் 38 வயர்டு இயர்போன் மாடலுக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த மாடலின் விலை ரூ. 250 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 199 விலையில் வாங்கிட முடியும்.
பிலிப்ஸ் ஆடியோ SHE 1505:
பிலிப்ஸ் ஆடியோ சீரிஸ் ஹெட்போன் மாடலுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி அமேசான் தளத்தில் இந்த ஹெட்போனை ரூ. 299 விலையில் வாங்கிட முடியும்.