ஏர்டெல் சிம் ஆக்டிவா இருக்கனுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க...!

By Kevin Kaarki  |  First Published May 26, 2022, 5:07 PM IST

ஏர்டெல் ஸ்மார்ட் ரிசார்ஜ் சலுகை குறைந்த விலையில் கிடைக்கும் சாதாரன ரிசார்ஜ் சலுகை மட்டும் தான்.


பாரதி ஏர்டெல் சிம் கார்டை இரண்டாவது கனெக்‌ஷனாக பயன்படுத்தி வருகின்றீர்களா? இந்த சிம் கார்டை எப்போதும் ஆக்டிவாக வைத்துக் கொள்ள ஏர்டெல் வழங்கி வரும் ஸ்மார்ட் ரிசார்ஜ் சலுகை சிறப்பான தேர்வாக இருக்கும். பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 99 விலை சலுகை அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் ரிசார்ஜ் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையை கொண்டு பயனர்கள் தங்களின் ஏர்டெல் சிம் கார்டை ஆக்டிவாக வைத்துக் கொண்டு டெலிகாம் சேவைகளையும் பயன்படுத்த முடியும். 

ஏர்டெல் ஸ்மார்ட் ரிசார்ஜ் சலுகையில் என்னென்ன பலன்கள் வழங்கப்படுகின்றன என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். பொதுவாக ஏர்டெல் சிம் கார்டை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால், ஏர்டெல் தரப்பில் இருந்து உங்களின் சிம் கார்டு டி ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும். மேலும் சிம் கார்டு டி ஆக்டிவேட் ஆகும் முன், உங்களுக்கு வந்து கொண்டு இருக்கும் இன்கமிங் அழைப்புகளும் நிறுத்தப்பட்டு விடும். 

Tap to resize

Latest Videos

undefined

சிம் கார்டை ஆக்டிவாக வைத்துக் கொள்ள ஏர்டெல் நெட்வொர்க்கில் கிடைக்கும் ரூ. 99 விலை ஸ்மார்ட் ரிசார்ஜ் சிறந்த சலுகையாக இருக்கும். ஏர்டெல் ரூ. 99 விலை ஸ்மார்ட் ரிசார்ஜ் சலுகை இரண்டாவது சிம் கார்டாக பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட சலுகை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட் ரிசார்ஜ் சலுகை குறைந்த விலையில் கிடைக்கும் சாதாரன ரிசார்ஜ் சலுகை மட்டும் தான்.

ஏர்டெல் ரூ. 99 ஸ்மார்ட் ரிசார்ஜ் பலன்கள்:

ரூ. 99 விலையில் ஏர்டெல் ஸ்மார்ட் ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு 200MB டேட்டா, ரூ. 99 மதிப்பிலான டாக்டைம், உள்ளூர் அழைுப்புகள் நொடிக்கு ஒரு பைசா கட்டணத்தில் பேசும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையை கொண்டு எஸ்.எம்.எஸ். அனுப்ப ரூ. 1 வசூலிக்கப்படும். எஸ்.டி.டி. எஸ்.எம்.எஸ். அனுப்பும் போது ஒரு எஸ்.எம்.எஸ். கட்டணம் ரூ. 2 என வசூலிக்கப்படுகிறது. 

இந்த சலுகையில் ரிசார்ஜ் செய்யும் போது சிம் கார்டு 28 நாட்களுக்கு ஆக்டிவாக இருக்கும். ஏர்டெல் சிம் கார்டை ஆக்டிவாக வைத்துக் கொள்ள இந்த அத்தனை விலை உயர்ந்த சலுகை இல்லை என்றே கூற வேண்டும். இந்த சலுகையை கொண்டு குறைந்த விலையில் ஏர்டெல் சிம் கார்டை ஆக்டிவாக வைத்துக் கொள்ள முடியும். 

click me!