ஐபோன் 12 மினி இவ்வளவு தானா? வைரலாகும் தகவலை நம்பாதீங்க...!

By Kevin Kaarki  |  First Published May 26, 2022, 4:17 PM IST

ஐபோன் 12 மினி மாடல் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை. 


ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மினி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 20 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்படுவதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. இந்த தகவலை நம்ப வேண்டாம். ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 12 மினி 64GB விலை ரூ. 49 ஆயிரத்து 999 ஆகும். அந்த வகையில் ஐபோன் 12 மினி மாடல் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை. 

தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மினி மாடலுக்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர ஐபோன் 12 மினி மாடலுக்கு வேறு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. இதனால் ஐபோன் 12 மினி மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக வலம் வரும் தகவல்களை நிராகரிப்பதே நல்லது.

Tap to resize

Latest Videos

undefined

விலை விவரம்:

ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் புதிய ஐபோன் 12 மினி பேஸ் மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 12 மினி 64GB மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐபோன் 12 மினி 256GB மாடல் ரூ. 64 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது பத்து சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். 

ஒரே வழி:

இந்தியாவில் ஐபோன் 12 மினி மாடலை ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் வாங்க ஒற்றை வழிமுறை இருக்கிறது. ஆனால் அதுவும் அதிகளவு சாத்தியமற்ற ஒன்று தான். உங்களிடம் ரூ. 30 ஆயிரம் வரை எக்சேன்ஜ் சலுகையை பெற்றுத் தரும் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். இத்தகைய மதிப்பு கொண்ட ஒற்றை ஸ்மார்ட்போன் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் தான். ஆனால் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் வைத்திருக்கும் யாரும் ஐபோன் 12 மினி வாங்க நினைக்க மாட்டார்கள்.

click me!