Airtel, Jio, VI 5G கிடைக்கும் இடங்கள், 5ஜி ரீசார்ஜ் பிளான்கள் உள்ளிட்ட முழுவிவரங்கள் இதோ!

By Dinesh TGFirst Published Oct 4, 2022, 7:49 AM IST
Highlights

பார்தி ஏர்டெல் ஏற்கனவே சுமார் 8 நகரங்களில் 5G சேவைகளை வெளியிடத் தொடங்கியுள்ளது, மேலும் தொலைத்தொடர்பு நிறுவனம் மார்ச் 2024 க்குள் அனைவருக்கும் அதை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) பிரதமர் மோடி இந்தியாவில் 5G ஐ அறிமுகப்படுத்தினார். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பிரதமர் மோடிக்கு 5G தொழில்நுட்ப சாதனங்களை டெமோ செய்து காட்டின. 

மேலும், குறிப்பிட்ட நகரங்களில் 5ஜி மொபைல் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனி மிட்டல் அறிவித்தார். இதனால், இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு 5ஜி வழங்கும் முதல் நிறுவனம் ஏர்டெல் என்ற பெயரை பெற்றது. Reliance Jio, BSNL மற்றும் Vodafone Idea (Vi) 5ஜி சேவைகள் விரைவில் பயனர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இது குறித்து  நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இங்கு காணலாம்:

இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா எப்போது 5ஜி சேவையை அமல்படுத்தும்?

இந்தியாவில் உள்ள 200 நகரங்களுக்குள் அடுத்த ஆறு மாதங்களில் 5ஜி வசதி கிடைக்கும் என இந்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே சென்னை உட்பட சுமார் 8 நகரங்களில் 5G சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது, மேலும் மார்ச் 2024க்குள் அனைவருக்கும் 5ஜி சேவை கிடைக்கச் செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதே போல் மறுபுறம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஏர்டெல்லுக்கு முன்பாகவே இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் 5G ஐக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளது.

ரிலையன்ஸின் தலைவர் முகேஷ் அம்பானி இதுகுறித்து பேசுகையில், டிசம்பர் 2023க்குள், அதாவது அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் ஜியோ 5G கிடைக்கும் என்று அறிவித்தார் . முதற்கட்டமாக தீபாவளிக்குள் 5ஜி சேவை குறிப்பிட்ட நகரங்களில் கிடைக்கும் என்று முன்பு ஜியோ நிறுவனம் கூறியிருந்தது. எனவே, இம்மாத இறுதியில் ஜியோ 5ஜி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வோடபோன் ஐடியா விரைவில் 5ஜியை வெளியிடத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளது, ஆனால் அது சரியான தேதியை கூறவில்லை.

சென்னையில் Airtel 5G வந்துவிட்டது.. அடப்பாவிகளா இவ்வளவு தான் உங்கள் வேகமா?

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, சுமார் 2 ஆண்டுகளில் 80-90 சதவீத இந்திய மக்களுக்கு 5G வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை வழங்கும் என்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கூறினார்.

எந்த நகரங்களில் முதலில் 5G சேவை கிடைக்கும்?

கொல்கத்தா, மும்பை, டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட நான்கு நகரங்களில் தீபாவளிக்குள் 5G முதலில் கிடைக்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏர்டெல் தற்போது டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூர், குருகிராம், சென்னை மற்றும் சில நகரங்களில் 5ஜி சேவையை வழங்குகிறது. வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை இன்னும் விவரங்களை வழங்கவில்லை.

5G Launch: அடுத்த ஆண்டிற்குள் கிராமங்கள் முழுவதும் 5ஜி கொண்டு வரப்படும்: முகேஷ் அம்பானி

இந்தியாவில் 5G திட்டங்களுக்கு எவ்வளவு செலவாகும்?

5G திட்டங்கள் மலிவு விலையில் கிடைக்கும் என்று அரசாங்கம் கூறியிருந்தது, இதை உறுதிப்படுத்தும் வகையில், மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் மத்திய அமைச்சர் வைஷ்ணவ் மீண்டும் அறிவித்தார். பிரதமர் மோடிம் இதையே சுட்டிக்காட்டி, “முன்பு, 1ஜிபி டேட்டாவின் விலை சுமார் ரூ.300 ஆக இருந்தது, இப்போது ஒரு ஜிபிக்கு ரூ.10 ஆகக் குறைந்துள்ளது. சராசரியாக, இந்தியாவில் ஒரு நபர் மாதத்திற்கு 14 ஜிபி பயன்படுத்துகிறார். இதற்கு மாதம் ரூ.4200 செலவாகும் ஆனால் ரூ.125-150 செலவாகும். அரசின் முயற்சியே இதற்கு வழிவகுத்தது என்றார்.

ஜியோ 5ஜி திட்டங்கள் உலகில் உள்ள மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்று அம்பானி அறிவித்துள்ளார். ஏர்டெல்லின் மூத்த அதிகாரி ஒருவர் 5ஜி திட்ட விலைகள் 4ஜி திட்டங்களைப் போலவே இருக்கும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. தற்போது, ​​மக்கள் அன்லிமிட்டேட் திட்டங்களுக்காக சுமார் 400-600 ரூபாய் செலவிடுகின்றனர். எனவே, 5G பிளானும் கிட்டத்தட்ட அதே போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

click me!