சென்னையில் Airtel 5G வந்துவிட்டது.. அடப்பாவிகளா இவ்வளவு தான் உங்கள் வேகமா?

Published : Oct 04, 2022, 07:43 AM IST
சென்னையில் Airtel 5G வந்துவிட்டது.. அடப்பாவிகளா இவ்வளவு தான் உங்கள் வேகமா?

சுருக்கம்

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி சேவையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி நடந்த மொபைல் காங்கிரஸ் மாநாட்டில், 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது 5ஜி தொழில்நுட்பத்தை டெமோ செய்து காட்டினர். முதற்கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவை கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி சேவையை அமல்படுத்தியுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.  அதன்படி, சென்னை தரமணி, கண்ணப்ப நகர் உள்ளிட்ட இடங்களில் 5ஜி சேவை கிடைத்துள்ளதாக வாடிக்கையாளர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். 

 


எப்படி இருக்கு 5ஜி ஸ்பீடு?
வாடிக்கையாளர் ஒருவர் தனது மொபைலில் 5ஜி ஸ்பீடு எந்தளவு உள்ளது என்பது குறித்து டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், 5ஜியின் டவுன்லோடு வேகம் கிட்டத்திட்ட நொடிக்கு 184Mbps அளவில் இருக்கிறது. அதாவது வெறும் 23 MB உள்ள கோப்பை நொடியில் பதிவிறக்கலாம். 

Airtel, Jio போல், BSNL நெட்வொர்க்கிலும் 5G சேவை தேதி அறிவிப்பு!

முன்னதாக 5ஜி அறிமுகம் செய்யும் போது, அசுர வேகத்தில் 5ஜி ஸ்பீடு இருக்கும், நொடியில் 2ஜிபி படத்தை வெறும் ஒரு சில நொடிகளில் பதிவிறக்கலாம் என்றெல்லாம் விளம்பரம் செய்தனர். 

ஆனால், தற்போது வாடிக்கையாளர்கள் பகிர்ந்துள்ள ஸ்கிரீன் ஷாட்டுகளைப் பார்த்தால், இது 5ஜியா 4ஜியா என்ற சந்தேகம் தான் எழுகிறது. மேலும், இது சோதனை ஓட்டமாக இருக்கலாம் என்றும், விரைவில் 5ஜியின் அசல் வேகம் தெரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  5ஜி அறிமுகம் செய்யப்பட்டாலும், அதன் விலை விவரங்கள் குறித்த தெளிவான அறிவிப்புகள் வரவில்லை.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!
Washing Machine: வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!