Airtel, Jio போல், BSNL நெட்வொர்க்கிலும் 5G சேவை தேதி அறிவிப்பு!

By Dinesh TG  |  First Published Oct 3, 2022, 1:22 PM IST

ஏர்டெல், ஜியோவைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் 5ஜி சேவை எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த செய்திகள் வந்துள்ளன.


கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2022 நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்தார். இந்நிகழ்வில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் வைஷ்ணவ் கலந்துகொண்டார். 

அப்போது பேசிய மத்திய அமைச்சர், ‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நெட்வொர்க்கில், அடுத்த ஆண்டு 5ஜி வசதி கொண்டு வரப்படும். குறிப்பாக ஆகஸ்ட் 15, 2023 தேதிக்குள் BSNL 5G சேவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Latest Videos

undefined

தற்போது இந்தியாவில் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் 200க்கும் மேற்பட்ட நகரங்கள் 5ஜி சேவையைப் பெறும். அதற்கு அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டில் 80-90% பகுதிகளில் 5ஜி சேவையை வழங்க முயற்சிகப்படும். 4ஜி போன்று, 5ஜி சேவைகளும் மலிவு விலையில் கிடைக்கும்’ இவ்வாறு அமைச்சர் வைஷ்ணவ் கூறினார். 

5G Launch: அடுத்த ஆண்டிற்குள் கிராமங்கள் முழுவதும் 5ஜி கொண்டு வரப்படும்: முகேஷ் அம்பானி

ஏர்டெல், ஜியோ போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையில் தீவிரம் காட்டி வரும் நிலையில், மத்திய அரசின் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிலும் 5ஜி குறித்த அறிவிப்பு வெளியானது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் பிஎஸ்என்எல் 5ஜி சேவைக்கான விலை விவரங்களை மத்திய அமைச்சர் வைஷண்வ் குறிப்பிடவில்லை.

5ஜி வந்துவிட்டது.. பட்ஜெட் விலையில், அமேசான் ஆஃபரில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்!

மொபைல் காங்கிரஸ் நிகழ்வில், ரிலையன்ஸ் ஜியோவின் நிறுவனர் முகேஷ் அம்பானி பேசுகையில், ‘இந்த ஆண்டு தீபாவளிக்குள் 5G நெட்வொர்க் தொடங்கப்படும் என்று கூறினார். ஆரம்ப கட்டத்தில் 13 நகரங்கள் 5ஜி சேவையைப் பெறும். அவை அகமதாபாத், பெங்களூரு, சென்னை, வாரணாசி, சண்டிகர், டெல்லி, ஜாம்நகர், காந்திநகர், மும்பை, புனே, லக்னோ, கொல்கத்தா, சிலிகுரி, குருகிராம் மற்றும் ஹைதராபாத் ஆகும். 

இதனிடையே, வோடஃபோன் ஐடியாவில் 5ஜி அதிவேக இணைய சேவைகளை தொடங்குவது குறித்து குறிப்பிட்ட காலக்கெடு எதையும் வைக்கவில்லை. 

நாட்டில் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டாலும், பல முக்கிய விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை. குறிப்பாக, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் யாரும் இதுவரை 5G திட்டங்களை வெளியிடவில்லை. 5ஜி திட்டங்களின் விலை குறித்தும் தெளிவு இல்லை.

click me!