இந்த 2022 ஆண்டோடு முடிந்து போன 5 முக்கிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள்!

By Narendran SFirst Published Dec 31, 2022, 10:53 PM IST
Highlights

இந்த 2022 ஆண்டு முடிந்து, புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், தொழில்நுட்ப உலகில் சில முக்கியமான தொழில்நுட்பங்களும், தயாரிப்புகளும் 2022 ஆண்டோடு முடிவுக்கு வந்துள்ளன. அவற்றில் 5 முக்கிய தொழில்நுட்பங்களை இங்குக் காணலாம். 

இந்த 2022 ஆண்டு முடிந்து, புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், தொழில்நுட்ப உலகில் சில முக்கியமான தொழில்நுட்பங்களும், தயாரிப்புகளும் 2022 ஆண்டோடு முடிவுக்கு வந்துள்ளன. அவற்றில் 5 முக்கிய தொழில்நுட்பங்களை இங்குக் காணலாம். ஐபாட் டச் முதல் ஐபோன் மினி வரை, தொழில்நுட்ப வளர்ச்சி அடிப்படையில் நாம் நீண்ட தூரம் வந்துவிட்டோம். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல தொழில்நுட்ப தயாரிப்புகள் உள்ளன, ஆனால் அவை 2022 இல் முடித்துக் கொள்ளப்பட்டன, ஏனெனில் அதை விட இப்போது நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அதனால், மக்கள் மத்தியில் பழைய தொழில்நுட்ப சேவைகள் மீதான நாட்டம் குறைந்துவிட்டது. அந்தவகையில், இந்த ஆண்டு முடிவுக்கு வந்த ஐந்து முக்கிய தொழில்நுட்ப தயாரிப்புகளை விரைவாகப் பார்ப்போம்.

இதையும் படிங்க: 200 பில்லியன் டாலர்களை இழந்த முதல் நபர் எலான் மஸ்க்?

2022 ஆண்டோடு முடிவுக்கு வந்த 5 முக்கிய தொழில்நுட்ப தயாரிப்புகள்:

ஐபாட் டச்: 

இந்த ஆண்டு மே மாதம் ஆப்பிள் அதன் ஐபாட் டச் சேவையை நிறுத்தியது. இது ஆப்பிள் தரப்பில் தயாரிக்கப்பட்ட மிக முக்கிய கேட்ஜெட் ஆகும். மக்களுக்கு இசை மீதான ஆர்வத்தை தூண்டிய கேட்ஜெட். சுமார் 10 மணி நேரம் வரை நீடித்து உழைக்கும் பேட்டரியுடன், ஆயிரம் பாடல்களைக் கொண்ட உலகின் முதல் MP3 பிளேயர் சாதனம் இதுவாகும்.  அசல் ஐபாட் டச் 2001 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நவீன வடிவமைப்புடன் பல பதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பிறகு தொழில்நுட்ப கேட்ஜெட்களின் அதிகரிப்பால் இது ஐபாட் டச் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போனது, ஆப்பிள் நிறுவனமும் இதை முடிவுக்குக் கொண்டுவந்தது.

ஐபோன் மினி:

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஐபோன் மினி பதிப்பையும் கைவிட்டது. ஃபிளாக்ஷிப் போன்களை மலிவு விலையில் பயனர்களுக்கு வழங்கும் வகையில், மினி பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. விலை குறைவாக இருந்தபோதும் கூட போதுமான அம்சங்களை வழங்கவில்லை. 5.4 இன்ச் டிஸ்ப்ளே இருந்தது, இந்த டிசைன் மிகவும் காலாவதியானது. பல ஆண்ட்ராய்டு சாதனங்களில் சிறந்த அம்சங்களுடன் இன்னும் சிறப்பாக இருந்ததால், ஆப்பிள் ஐபோன் மினிக்கு போதுமான வரவேற்பு இல்லை.  எனவே, மினி வெர்ஷனின் விற்பனையும் மிகவும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆப்பிள் மினி சீரிஸ் முடித்துக்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் (BGMI) மீண்டும் வருகிறதா?

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர்:

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரும் இந்தாண்டு முடிந்துவிட்டது. இது சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் இருந்தது. தற்போது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்குப் பதிலாக மைக்ரோசாப்ட் எட்ஜ் என்ற பிரவுசர் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு சிறந்த, பாதுகாப்பான மற்றும் வேகமான இணையத்தை வழங்க உதவுகிறது.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக்பெர்ரி:

மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றான பிளாக்பெர்ரியும் இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இடையேயான கடும் போட்டியின் காரணமாக இவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் மேலும் பிளாக்பெர்ரியால் போட்டிகளை எதிர்கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு டிசம்பரில், பிளாக்பெர்ரி 7.1 ஓஎஸ் மற்றும் முந்தைய பிளாக்பெர்ரி 10 சாப்ட்வேர், பிளாக்பெர்ரி பிளேபுக் ஓஎஸ் 2.1 மற்றும் முந்தைய பதிப்புகளுக்கான பாரம்பரிய சேவைகள் ஜனவரி 4, 2022க்குப் பிறகு கிடைக்காது என்று பிராண்ட் அறிவித்துவிட்டது. குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு டேட்டாவைப் பயன்படுத்தவோ அல்லது  கால் செய்யவோ முடியாது. 

கூகுள் ஸ்டேடியா: 

கூகுள் ஸ்டேடியா என்ற தயாரிப்பு இருப்பது பலருக்கும் தெரிந்திருக்காது. இது கிளவுட் கேமிங் தளமாகும்.  இது அடுத்த ஆண்டு ஜனவரி 18 வரை கிடைக்கும். அதன்பிறகு இந்த கேமிங் சேவை முடிவுக்கு வருகிறது.

click me!