இந்த 2022 ஆண்டில் WhatsApp செயலியில் பல அம்சங்களை அறிமுகப்படுத்தியது. இருப்பினும் மற்ற சமூக வலைதளங்களோடு ஒப்பிடுகையில் பல அம்சங்கள் இன்னும் வரவில்லை. அந்த வகையில், வாட்ஸ்அப் பயனர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு சில அம்சங்களை இங்குக் காணலாம்.
மெசேஜ்களை செடியூல் செய்தல்:
WhatsApp செயலியில் மெசேஜ்களை ஆட்டோ டெலிட் செய்வதற்கான ஆப்ஷன் உள்ளது. இருப்பினும், செடியூல் ஆப்ஷன் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். பணி நிமித்தமாக வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மெசேஜ் எடிட் வசதி:
WhatsApp செயலியில் மெசேஜ்களை தானாக நீக்கவும், அவற்றை அனுப்பிய பின் மற்றவர்களுக்கும் சேர்த்து டெலிட் செய்யவும் ஆப்ஷன் உள்ளது. அதோடு, மெசேஜை எடிட் செய்யும் வசதி எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் தவறான மெசேஜை டெலிட் செய்வதற்கு பதிலாக, அதைத் திருத்தம் செய்து அனுப்பலாம்.
Unsend:
இன்ஸ்டாகிராமில் அன்சென்ட் அம்சம் இருப்பது போல், வாட்ஸ்அப்பிலும் அன்சென்ட் அம்சம் இருந்தால் நன்றாக இருக்கும். இப்போது இருக்கும் டெலிட் ஆப்ஷனில், மெசேஜ் டெலிட் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும். அன்சென்டில் அப்படி எந்த அறிவிப்பும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
கொஞ்சம் பொறுத்திருங்க.. இந்த 3 ஸ்மார்ட்போன்கள் வரப் போகுது!
வானிஷ் முறை :
வாட்ஸ்அப்பில் Vanish mode என்ற அம்சம் வேண்டும் என்று பயனர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது, தற்காலிகமாக ஒரு சேட் அமைத்து, அதில் பேசி முடித்த பின், தானாகவே அந்த சேட் டெலிட் ஆகிவிடும். அலுவல் ரகசியங்கள் உள்ளிட்டவை பேசுவதற்கு இந்த அம்சம் உகந்ததாக இருகு்கும்.
கால் ரெக்கார்டிங்:
வாட்ஸ்அப்பில் கால் ரெக்கார்டிங் என்ற அம்சம் இருந்தால், முக்கிய விவரங்கள், அழைப்புகளை பதிவு செய்ய ஏதுவாக இருக்கும். அதுவும் ஒரு ஆப்ஷன் என்ற முறையில் இருந்தால் போதுமானது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேற்கண்ட அம்சங்கள் வரும் 2023 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப்பில் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.