செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் பல புதுப்புது வளர்ச்சிகளைச் சந்தித்து வருகிறது. AI மூலம் இசை அமைக்கும் மியூசிக் ஜெனரேட்டர்கள் இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் பல புதுப்புது வளர்ச்சிகளைச் சந்தித்து வருகிறது. AI மூலம் இசை அமைக்கும் மியூசிக் ஜெனரேட்டர்கள் இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
Suno
சுனோ ஒரு இலவச டெக்ஸ்ட்-டு-மியூசிக் ஜெனரேட்டர். இதன் மூலம் ஓரிரு வினாடிகளில் புதிய இசையை உருவாக்க முடியும். பாடல் வரிகளுடன் வேண்டுமா வேண்டாமா என்பதையும் தேர்வு செய்துகொள்ளலாம். இதை பயன்படுத்த தளத்தில் ஒரு கணக்கு தொடங்குவது அவசியம்.
SongR
இந்த AI மியூசிக் ஜெனரேட்டரில் சில நொடிகளில் புதிய இசையை உருவாக்கலாம். லாக்-இன் செய்யவும் தேவையில்லை. இதில் உங்களுக்குப் பிடித்த இசை வகையைத் தேர்வுசெய்து, இரண்டு கீவேர்டுகளைக் குறிப்பிட்டால் போதும். அதற்கு ஏற்ப இசையை தயாரித்துக் கொடுத்துவிடும்.
20 ஆயிரம் பட்ஜெட்டில் செம ஸ்மார்ட்போன் வாங்கணுமா? இதைப் பார்த்துட்டு செலக்ட் பண்ணுங்க!
Riffusion
மற்ற மியூசிக் ஜெனரேட்டர்களுடன் ஒப்பிடும்போது ரிஃப்யூஷன் வேறுபட்ட அணுகுமுறையில் இயங்குகிறது. பயனர்கள் பாடல் வரிகளை டைப் செய்தால், அதற்கு ஏற்ப இசை அமைத்துக் கொடுக்கும். இதில் 12 வினாடிகள் நீளம் கொண்ட இசையை மட்டுமே பெற முடியும். அவை ரீல்கள் போன்ற சிறிய வீடியோவில் சேர்ப்பதற்கு பொருத்தமாக இருக்கும்.
Beatoven.ai
பீத்தோவன் இலவசமாக இசையை உருவாக்கிக் கொடுக்கும் மற்றொரு மியூசிக் ஜெனரேட்டர் ஆகும். இதில் சில நொடிகளில் இசையை உருவாக்கலாம். ஆனால், பயனர்கள் இதை பயன்படுத்த இந்தத் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
MusicFX
இந்த இணையதளத்தில் சிறிய இசைக் கோப்புகளை எளிதாக உருவாக்க முடியும். இதன் மூலம் உருவாக்கும் பாடல்களில் குரல் கிடையாது. அதிகபட்சமாக 70 வினாடிகளுக்கு இசையை உருவாக்கலாம். இது தற்போது இந்தியாவில் கிடைக்கவில்லை.
துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்த 42,000 இஸ்ரேல் பெண்கள்! 10,000 பேருக்கு பயிற்சி!