
இந்த புதிய Motorola Razor 50 Ultra அமேசான் வழியாக நாட்டில் விற்பனைக்கு வரும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவை Moto நிறுவனம் வெளியிட்டதல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் Moto நிறுவனம் அண்மையில் இந்த புதிய போனில் உள்ள AI அம்சங்கள் குறித்து பேசியதும் அனைவரும் அறிந்ததே.
மோட்டோரோலாவின் இந்த மடிக்கக்கூடிய கைபேசி 4,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இது 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது. வெளிப்புறத் திரையில் 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவை உள்ளடக்கிய இரட்டை பின்புற கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
10 ஆயிரம் கூட இல்லை பாஸ்.. 10000 ஆயிரத்திற்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட் இதோ..
Motorola Razr 50 Ultra, அல்லது பிற நாடுகளில் Razr+ 2024 என்று அழைக்கப்படும் இந்த போனில் Snapdragon 8s Gen 3 சிப்செட் மற்றும் 12GB RAM மற்றும் 256GB ROM பொருத்தப்பட்டிருக்கும் என்று சில வாரங்களுக்கு முன்பு வெளியான தகவல்கள் தெரிவித்தது. மேலும் இந்த கைபேசியில் 3.6 இன்ச் கவர் டிஸ்பிலே மற்றும் 6.9 இன்ச் இன்னர் டிஸ்ப்ளே இடம்பெறும்.
அமேசானில் இந்த ஸ்மார்ட்போனின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்தியாவில் இது எப்போது அறிமுகமாகும் என்பதற்கான எந்த தகவலும் இப்பொது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் 25 அன்று சீனாவில் Razr 50 Ultra அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆகவே இம்மாத இறுதிக்குள் அது இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளது.
20 ஆயிரம் பட்ஜெட்டில் செம ஸ்மார்ட்போன் வாங்கணுமா? இதைப் பார்த்துட்டு செலக்ட் பண்ணுங்க!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.