AI Technology : AI தொழில்நுட்பம், விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது ஒருபுறம் இருந்தாலும், இன்று அது பலருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றே கூறலாம்.
இந்த சூழலில் YouTube தலத்தில், பயனர்களின் முகம் மற்றும் குரலை திருடி பயன்படுத்தும் AI தொழில்நுட்பத்திற்கு எதிராக களமிறங்கியுள்ளது YouTube. இனி யாரேனும், உங்கள் வீடியோகளில் உள்ள குரல் அல்லது முகத்தை திருடி, அதை தவறாக பயன்படுத்தினால், அவர்கள் மீது புகார் அளிக்க புதிய வழிமுறையை கொண்டுவந்துள்ளது YouTube.
YouTube வெளியிட்ட அறிக்கையில்.. பயனர்கள் தங்கள் முகம் அல்லது குரலை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, AI தொழில்நுட்பம் அடங்கிய வீடியோ மற்றும் பிற விஷயங்கள் குறித்து புகாரளிக்க முடியும் என்று அறிவித்துள்ளது. தனியுரிமை சட்டம் மூலம் இந்த புகார் செயல்முறையைப் பயன்படுத்தி, பயனர்கள் அத்தகைய வீடியோக்கள் மீது புகாரளிக்கலாம்.
ரூ.20 ஆயிரம் விலைக்குள் விற்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்.. முழு லிஸ்ட் இதோ.. நோட் பண்ணுங்க!
தங்களுடைய முகம் அல்லது குரல் வேறொரு வீடியோவில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தால், தன்னுடைய தனியுரிமை மீறலுக்கான ஆதாரங்களை அவர்கள் பகிர்ந்து, அதை பதிவேற்றியவரின் விவரங்களைப் பகிரவும் இனி YouTube அனுமதிக்கும். மேலும் பயனர் இந்த புகாரைச் சமர்ப்பித்தவுடன், அது பல செயல்முறைகளை கையாண்டு, உண்மையில் புகார் அளிக்கப்பட்ட வண்ணம் அந்த வீடியோவில் தவறு இருந்தால், நிச்சயம் அந்த வீடியோ நீக்கப்படும் என்று கூறியுள்ளது.
YouTubeன் தனியுரிமை புகார் செயல்முறை படிவத்தை ஆன்லைன் மூலம் அனுப்பலாம், இதில் பயனர்கள் ஆறு பக்கங்கள் கொண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டியிருக்கும். இது ஒரு நீண்ட செயல்முறை தான் என்றாலும் நிச்சயம் அதனால் பலன் கிடைக்கும். அதே நேரத்தில் இந்த செயல்முறையை தவறாகப் பயன்படுத்தினால், அவர்களின் கணக்கு இடைநிறுத்தப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
ஆனால், உண்மையில் தங்களுடைய தனியுரிமை பற்றி புகார் அளிக்க விரும்புவோர்க்கு நிச்சயம் இந்த புதிய வசதி துணை நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்பதை YouTube வலியுறுத்தியுள்ளது. தொழில்நுட்பம் வேகமாக வளரும் அதே நேரம், அது குறித்தான ஒரு பயமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
மைக்ரோசாஃப்ட், கூகுள் குரோம் பயனர்களைக் குறிவைக்கும் புதிய மால்வேர் தாக்குதல்!