Renault Kiger 2022: சூப்பர் அப்டேட், கிட்டத்தட்ட அதே விலை - புதிய கைகர் மாடல் அறிமுகம்..!

By Kevin KaarkiFirst Published Mar 31, 2022, 11:37 AM IST
Highlights

Renault Kiger 2022: 2022 ரெனால்ட் கைகர் மாடலின் வெளிப்புறம் சிறு அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

2022 ரெனால்ட் கைகர் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய 2022 ரெனால்ட் கைகர் விலை ரூ. 5.84 லட்சம் என துவங்குகிறது. இது முந்தைய மாடலை விட ரூ. 5 ஆயிரம் விலை அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய கைகர் மாடலின் வெளிப்புறம் சிறு அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மாற்றங்கள்:

புதிய 2022 ரெனால்ட் கைகர் மாடலின் முன்புற பம்ப்பரில் சில்வர் ஸ்கிட் பிளேட், டெயில் கேட்டில் புதிய குரோம் கார்னிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடல்களின்ல் 'Turbo' டீகல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 16 இன்ச் அலாய் வீல்களில் சிவப்பு நிற அக்செண்ட்கள் உள்ளன. கைகர் மாடலில் டூயல் டோன் மஸ்டார்டு எல்லோ மற்றும் பிளாக் ரூஃப் நிற ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே நிறம் டிரைபர் எம்.பி.வி. மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

காரின் முன்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி கைகர் மாடலில் குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இவை எந்த வேரியண்டில் வழங்கப்படும் என்பதை ரெனால்ட் தெரிவிக்கவில்லை. தற்போது வயர்லெஸ் சார்ஜிங் வசதி ஸ்மார்ட் பிளஸ் திட்டத்தின் கீழ் ஆப்ஷனாகவே வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் போட்டி நிறுவன மாடல்களான ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்டவைகளில் இரு அம்சங்கள் அல்லது இரண்டில் ஏதேனும் ஒரு அம்சம் நிச்சயம் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் டேஷ்போர்டில் சிவப்பு நிற அக்செண்ட்கள் உள்ளன. இத்துடன் இருக்கைகளில் சிவப்பு நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கைகர் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் PM2.5 ஏர் ஃபில்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.
 
என்ஜின் ஆப்ஷன்கள்:

2022 ரெனால்ட் கைகர் மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72 ஹெச்.பி. திறன், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 100 ஹெச்.பி. பவர், 160 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 2022 கைகர் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. CVT ஆப்ஷனில் என்ஜின் செயல்திறன் 152 நியூட்டன் மீட்டர்களாக குறைந்து விடும்.

மற்ற மாடல்கள்:

இந்திய சந்தையில் 2022 ரெனால்ட் கைகர் மாடல் நிசான் மேக்னைட், ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்சான், மஹிந்திரா XUV300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

click me!