ஒரே மாதத்தில் ஆயிரம் யூனிட்கள்.... விற்பனையில் மாஸ் காட்டும் எம்.ஜி. ZS EV

By Kevin Kaarki  |  First Published May 1, 2022, 4:59 PM IST

ஊரடங்கு காரணமாக புதிய ZS EV மாடலின் வினியோகம் மேலும் பாதிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.


எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் புதிய 2022 ZS EV எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் கடந்த மாதம் மட்டும் ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக மார்ச் மாத விற்பனையிலும் 2022 ZS EV மாடல் அமோக வரவேற்பை பெற்று இருந்தது. எனினும், 2022 மார்ச் மாதத்தில் 2022 எம்.ஜி. ZS EV மாடலை வாங்க ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். 

ஒவ்வொரு மாதமும் முன்பதிவு யூனிட்கள் அதிகரிப்பதை வைத்து பார்க்கும் போதே, எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதை உணர முடிகிறது. எனினும், சீனாவில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு காரணமாக புதிய ZS EV மாடலின் வினியோகம் மேலும் பாதிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. 

Latest Videos

undefined

விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் புதிய 2022 எம்.ஜி. ZS EV மாடல் விலை ரூ. 21 லட்சத்து 09 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 25 லட்சத்து 88 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

2022 எம்.ஜி. ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் நிரந்தர மேக்னட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இணைந்து 174 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும். 

டிசைன்:

புதிய 2022 எம்.ஜி. ZS EV மாடல் முன்புறம் என்க்ளோஸ்டு கிரில், முன்புற பம்ப்பர் மாற்றப்பட்டு கூர்மையான டிசைன், அகலமான ஏர் டேம் உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது. இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. காரின் பின்புறத்தில் புது டிசைன் கொண்ட டெயில் லைட், அப்டேட் செய்யப்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

இத்துடன் லண்டன்-ஐ ப்ரோஜெக்டர் ரக ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், ரூஃப் ரெயில்கள், பின்புற ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. இந்த காரின் சார்ஜிங் சாக்கெட் முந்தைய மாடலில் இருந்ததை போன்று இல்லாமல், எம்.ஜி. லோகோ அருகில் இடது புறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. 

click me!