சூப்பர் டிசைன், கம்மி விலை புது ரியல்மி இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

By Kevin Kaarki  |  First Published Apr 30, 2022, 4:47 PM IST

ரியல்மி நிறுவனம் புது ஸ்மார்ட்போன் மாடல்களுடன் ரியல்மி பட்ஸ் Q2s ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரியல்மி பட்ஸ் Q2s ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது இயர்பட்ஸ் டிரான்ஸ்பேரண்ட் கேஸ், 10 மில்லிமீட்டர் டிரைவர், ப்ளூடூத் 5.2 மற்றும் AAC கோடெக், AI ENC, 88ms சூப்பர் லோ லேடன்சி கேமிங் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன. 

மேலும் இந்த இயர்பட்ஸ்-இல் டால்பி அட்மோஸ் வசதி, 400mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கான பிளேபேக் கிடைக்கும். மேலும் இந்த இயர்பட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

ரியல்மி பட்ஸ் Q2s அம்சங்கள்:

- 10mm Bass Boost டிரைவர்
- ப்ளூடூத் 5.2, AAC ஆடியோ கேடெக்
- இண்டெலிஜண்ட் டச் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட்
- AI ENC அல்காரிதம் 
- 88ms சூப்பர் லோ லேடன்சி கேமிங் மோட்
- ரியல்மி லிண்க் ஆப் 
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX4)
- 40mAh பேட்டரி
- பாஸ்ச் சார்ஜிங் வசதி, 10 நிமிட சார்ஜிஙகில் மூன்று மணி நேகர பிளேபேக்

புதிய ரியல்மி பட்ஸ் Q2s ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் நைட் பிளாக், பேப்பர் வைட் மற்றும் பேப்பர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,999 ஆகும். ரியல்மி பட்ஸ் Q2s விற்பனை மே 2 ஆம் தேதி துவங்க இருக்கிறது. விற்பனை ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான், ப்ளப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. 

ரியல்மி பட்ஸ் Q2s மட்டும் இன்றி ரியல்மி நிறுவனம் பட்ஸ் ஏர் 3 நைட்ரோ புளூ எடிஷனையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் விற்பனை மே 4 ஆம் தேத ரியல்மி வலைதளத்தில் துவங்குகிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 999 ஆகும். 

click me!