ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன் - மாஸ் காட்டிய போக்கோ!

By Kevin Kaarki  |  First Published Apr 30, 2022, 5:08 PM IST

போக்கோ M4 5ஜி மாடலின் பின்புறத்தில் ஸ்வில் பேட்டன் உள்ளது. இது கைரேகைகளை ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பதிய விடாமல் பார்த்துக் கொள்ளும்.


போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய M4 5ஜி ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய போக்கோ M4 5ஜி ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், 2GB விர்ச்சுவல் ரேம் உள்ளது. 

புதிய போக்கோ M4 5ஜி மாடலில் அதிகபட்சமாக ஏழு 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி, ஆண்ட்ராய்டு 12 மற்றும் MIUI 13 போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிளாட் சைடுகளை கொண்டிருக்கும் போக்கோ M4 5ஜி மாடலின் பின்புறத்தில் ஸ்வில் பேட்டன் உள்ளது. இது கைரேகைகளை ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பதிய விடாமல் பார்த்துக் கொள்ளும். இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

Latest Videos

undefined

போக்கோ M4 5ஜி அம்சங்கள்:

- 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 4GB LPDDR4x ரேம், 64GB (UFS 2.2) மெமரி
- 6GB LPDDR4x ரேம், 128GB (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 12 & MIUI 13
- 50MP பிரைமரி கேமரா 
- 2MP போர்டிரெயிட் கேமரா 
- 8MP செல்பி கேமரா 
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- டஸட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட், வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18W பாஸ்ட் சார்ஜிங்

விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் புதிய போக்கோ M4 5ஜி ஸ்மார்ட்போன் கூல் புளூ, பவர் பிளாக் மற்றும் போக்கோ எல்லோ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. போக்கோ M4 5ஜி மாடலின் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

புதிய போக்கோ M4 5ஜி மாடலின் விற்பனை மே 5 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

click me!