Honda Africa Twin : விலை ரூ. 16 லட்சம் தான்... புதிய அட்வென்ச்சர் பைக் அறிமுகம் செய்த ஹோண்டா

By Kevin Kaarki  |  First Published Mar 18, 2022, 1:33 PM IST

Honda Africa Twin : 2022 ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் அட்வென்ச்சர்  ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


2022 ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 16.01 லட்சம் என துவங்குகிறது. புதிய 2022 ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஹோண்டா பிக்விங் வலைதளங்கள் மற்றும் இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் ஹோண்டா பிக்விங் விற்பனை மையங்களில் 2022 ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று  வருகிறது. 2022 ஹோண்டா அஃப்ரிக்கா டுவின் மாடல் CKD முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் இதன் பாகங்கள் இந்தியா கொண்டுவரப்பட்டு இங்குள்ள ஆலையில் அசெம்பில் செய்யப்படும்.

Tap to resize

Latest Videos

2022 ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் மோட்டார்சைக்கிளில் டூயல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டேடைம் ரன்னிங் லைட்கள், கார்னெரிங் லேம்ப்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 6.5 இன்ச் TFT தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஸ்கிரீன் ரைடிங்கின் போது தெளிவாக தெரியும்படி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 2022 ஆஃப்ரிக்கா டுவின் மாடலின் கிராஃபிக்ஸ் முன்பை விட வித்தியாசமாக வழங்கப்பட்டு உள்ளது.

புதிய 2022 மாடலிலும் மேனுவல் வேரியண்டிற்கு பியல் வைட் டிரைகலர்,  DCT கியர்பாக்ஸ் வேரியண்டிற்கு மேட் பலிஸ்டிக் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. புதிய 2022 ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளில் 1083 சிசி, பேரலெல் டுவின், லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 98 ஹெச்.பி. திறன், 103 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

தொழில்நுட்பங்களை பொருத்தவரை புதிய 2022 ஹோண்டா அஃப்ரிக்கா டுவின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மாடலில் 6 ஆக்சிஸ் இனெர்ஷியல் மெஷர்மெண்ட் யூனிட், 2 சேனல் ABS, செலக்ட் செய்யக்கூடிய டார்க் கண்ட்ரோல், 6 ரைடிங் மோட்கள். இவற்றில் நான்கு ரைடிங் மோட் டீஃபால்ட் ஆப்ஷனாகவும், இரு ரைடிங் மோட்களை கஸ்டமைஸ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

"புதுவித பயண அனுபவங்களை பெற பலதரப்பட்ட நிலப்பகுதி இந்தியாவில் இருப்பதால், அட்வென்ச்சர் ரைடிங் பிரியர்கள் எண்ணிக்கையும் இங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆஃப்ரிக்கா டுவின் டிரைப் டக்கர் ரேலி டி.என்.ஏ. மூலம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. தற்போது புதிய 2022 ஆஃப்ரிக்கா டுவின் மாடல்களை கொண்டு, அட்வென்ச்சர் கலாச்சாரம் மேலும் ஒருபடி உயரப் போகிறது," என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் யத்வீந்தர் சிங் குலேரியா தெரிவித்தார்.

click me!