ஒரே மொபைலில் பல அக்கவுண்ட்! வாட்ஸ்அப்பில் விரைவில் வருகிறது புதிய அப்டேட்

By SG Balan  |  First Published Jun 19, 2023, 6:04 PM IST

வாட்ஸ்ஆப்பில் மல்டி அக்கவுண்ட் அம்சம் இப்போது சோதனை கட்டத்தில் உள்ளது. விரைவில் எல்லா பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும்.


ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் மற்றும் மேகோஸ் உள்ளிட்ட அனைத்து இயங்குதளங்களிலும் கம்பேனியன் பயன்முறையை வாட்ஸ்அப் ஏற்கனவே கிடைக்கச் செய்துள்ளது. முதன்மையான மொபைலில் இருந்து வெளியேறாமல், வேறு நான்கு மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்த, இந்த கம்பேனியன் முறை அனுமதிக்கிறது.

இப்போது, ​வாட்ஸ்அப் ​நிறுவனம் மல்டி அக்கவுண்ட் சப்போர்ட் எனப்படும் புதிய அம்சத்தில் கவனம் செலுத்தி தயார் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மல்டி அக்கவுண்ட் அம்சம் வளர்ச்சி கட்டத்தில் உள்ளது. பீட்டா பயனர்களுக்கே இன்னும் வழங்கப்படவில்லை. இருப்பினும், கூகுள் பிளே ஸ்டோரில் இல் ஏற்கனவே கிடைக்கும் வாட்ஸ்அப் பிசினஸ் செயலியின் வெர்ஷன் 2.23.13.5 ல் இந்த அம்சம் காணப்படுகிறது.

Latest Videos

undefined

கல்லூரியில் சேரமுடியாமல் தவித்த ஏழை மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்! சு.வெங்கடேசன் பாராட்டு!

வாட்ஸ்அப் விரைவில் பீட்டா பயனர்களுடன் இந்த அம்சத்தை வழங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக நிறுவனத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

புதிய மல்டி அக்கவுண்ட் அம்சம் எவ்வாறு செயல்படுகிறது? இதற்காக வாட்ஸ்ஆப் ஒரு புதிய மெனுவைச் சேர்த்துள்ளது. இது பயனர்கள் ஒரே பயன்பாட்டில் இணைக்கப்பட்ட வெவ்வேறு கணக்குகளைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும். பயனர்கள் உள்நுழைய கணக்குகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கு மாறலாம். கணக்கில் உள்நுழைந்ததும், பயனர் தானே லாக் அவுட் செய்யும் வரை அது லாக் இன் நிலையிலேயே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

வெறும் ரூ.1,159க்கு கிடைக்கும் ஆப்பிள் AirPods Pro.. 25 ஆயிரம் வரை தள்ளுபடி - முழு விபரம் உள்ளே!

இது பயனர்களுக்கு எவ்வாறு உதவும்?

மல்டி அக்கவுண்ட் அம்சம் பலருக்கும் மிகவும் தேவையான அம்சமாகும். இதன் மூலம் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட மற்றும் பணி தொடர்பான கணக்குகளை ஒரே சாதனத்தில் வைத்துக்கொள்ளலாம். இதற்காக டூயல் ஆப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இது பயனர்களுக்கு தனியுரிமையுடன் கூடிய கணக்கு நிர்வாகத்தை அளிக்கும்.

இந்த அம்சம் இப்போது சோதனையில்தான் உள்ளது. தற்போது வணிக பயன்பாட்டிற்காகக் கிடைக்கிறது. ஆனால், வாட்ஸ்அப் இந்த அம்சத்தை எல்லா பயனர்களுக்கும் விரைவில் கொண்டுவரும் என்று நம்பலாம்.

ஆதார் - பான் கார்டு இணைக்கவில்லையா? ரூ.1000 கட்டணம் செலுத்தி இணைப்பது எப்படி?

click me!