வாட்ஸ்அப் கீபோர்டில் மாற்றம்! புதிய வடிவமைப்புடன் அறிமுகமாகும் எமோஜி பார் அப்டேட்!

By SG BalanFirst Published Jun 11, 2023, 3:26 PM IST
Highlights

வாட்ஸ்அப் தனது சமீபத்திய அப்டேட் மூலம் எமோஜி பாருடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட கீபோர்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில், வாட்ஸ்அப் எமோஜி பாருடன் கூடிய கீபோர்டை அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இப்போது சில பீட்டா சோதனையாளர்களுக்கு அந்த அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. ஐ ஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கு ஈமோஜி பாருடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கீபோர்டை வெளியிட்டுள்ளது.

ஆண்டிராய்டு பயனர்கள் 2.23.12.19 வெர்ஷனையும் ஐ ஓஎஸ் பயனர்கள் 23.12.0.70 வெர்ஷனையும் இன்ஸ்டால் செய்தால் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கீபோர்டை பயன்படுத்தலாம். இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் கீபோர்டை மேல்நோக்கி ஸ்க்ரோல் செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர். புதிய அப்டேட்டில் GIF, ஸ்டிக்கர் மற்றும் அவதார் பிரிவுகளும் மேல் கீபோர்டின் மேல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

கூகுள் டிரைவ் அடிக்கடி ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிறதா? ஈசியாக ஸ்பேஸ் உருவாக்கும் வழிகள் இதோ!

தற்போது, பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் கிடைக்கும் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் சமீபத்தில் அதன் பயனர்களுக்கு உலகளாவிய பாதுகாப்பு மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தேவையற்ற தொடர்பு மற்றும் ஸ்பேம் செய்திகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பயனர்களுக்கு அதிகாரம் அளிப்பதே இதன் நோக்கமாகும். பாதுகாப்பு மையம் ஆங்கிலம் மற்றும் இந்தி, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பத்து இந்திய மொழிகளில் கிடைக்கும்.

தேசிய உணவுப் பாதுகாப்பு பட்டியலில் மதுரைக்கு 9வது இடம்; தமிழகத்தில் 3வது இடம்!

பாதுகாப்பு மையத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் பயனர்கள் தங்கள் கணக்குகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு முக்கியத்துவம் வழங்குவதாக வாட்ஸ்அப் நிறுவனம் சொல்கிறது. அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களில் இருந்து ஸ்பேம் அழைப்புகளை எதிர்கொண்ட பயனர்களின் புகாரைத் தொடர்ந்து, பாதுகாப்பு மையத்தை உருவாக்க வாட்ஸ்அப் முடிவு எடுத்தது.

கேரளாவில் ஒரு தமிழ் கலெக்டர்! கோட்டயம் மாவட்டத்தை அசத்தும் மதுரை பெண் விக்னேஷ்வரி ஐஏஎஸ்

click me!