ட்விட்டரில் டிக் வாங்கிய பயனர்களுக்கு மட்டும்... எலான் மஸ்க் வெளியிட்ட புதிய அறிவிப்பு

By SG BalanFirst Published Jun 10, 2023, 7:58 AM IST
Highlights

ட்விட்டரில் பிரபலங்களின் கணக்குகளில் விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் அம்சத்தை அறிமுகம் செய்வதாக எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுவதாக உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டிக் வாங்கிய ட்விட்டர் பயனர்களின் கணக்குகளில் அவர்கள் பதிவிடும் ட்வீட்களுக்கு வரும் ரிப்ளை பகுதியில் விளம்பரங்கள் இடம்பெறும் என்றும் அதற்காக அந்தப் பயனர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை வழங்கும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதைக் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் எலான் மஸ்க், "சில வாரங்களில், ட்விட்டர் பிரபலங்களின் ட்வீட்களுக்கு பதில் அளிக்கும் பகுதியில் இடம்பெறும் விளம்பரங்களுக்கு ட்விட்டர் பணம் செலுத்தத் தொடங்கும். முதல் கட்டமாக இதற்கு 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 41.21 கோடி ரூபாய்) ஒதுக்கப்பட்டது" என்று ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலவசம்.. நீங்க வந்தா மட்டும் போதும்! ஜியோவை தொடர்ந்து இலவசத்தை அறிவித்த Disney+ Hotstar

மேலும், ட்விட்டரில் வெரிஃபைடு கணக்கு வைத்துள்ள கிரியேட்டர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தின் பொறுப்பேற்ற எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறார். அந்த வகையில் அவர் அறிவித்துள்ள சமீபத்திய மாற்றம் இதுவாகும்.

ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய ட்விட்டர் நிறுவனம், கட்டணம் செலுத்தாத பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கியது. பின்னர் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பின்தொடரப்படும் பிரபலங்களின் கணக்குகளுக்கு மட்டும் கட்டணம் இல்லாமல் ப்ளூ டிக் வழங்க முடிவு செய்திருக்கிறது.

செயற்கை நுண்ணறிவால் வேலை போகாது..AIக்கு கட்டுப்பாட்டை விதிக்கும் இந்தியா - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

அண்மையில், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்கரினோ பொறுப்பேற்ற பிறகு ட்விட்டரில் ப்ளூ டிக் பெற சந்தா செலுத்துபவர்களை அதிகரிக்கவும் விளம்பரதாரர்களைத் தக்கவைக்கவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

OPEN AI நிறுவனத்தின் சி.இ.ஓ. சாம் ஆல்ட்மன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

click me!