லிங்டின் நிறுவனத்தில் 716 ஊழியர்கள் பணி நீக்கம்! சீனாவில் செயல்பாட்டைக் குறைக்கவும் திட்டம்

By SG Balan  |  First Published May 9, 2023, 1:18 PM IST

வேலை தேடுவோருக்கான சமூக வலைத்தளமான லிங்டின் நிறுவனத்தில் 700 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பல புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் வரிசையில் லிங்டின் (LinkedIn) நிறுவனத்திலும் பணியாளர்களைக் குறைப்பது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்க்கு சொந்தமான லிங்டின் சமூக ஊடக இணையதளத்தில் பணிபுரியும்  716 ஊழியர்களைக் குறைப்பதாகவும், சீனாவில் அதன் பயன்பாட்டை படிப்படியாக நீக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

20,000 ஊழியர்களைக் கொண்ட லிங்டின், கடந்த ஆண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் வருவாயை அதிகரித்தது வந்தது. ஆனால் பலவீனமான உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு மத்தியில் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதில் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் இந்நிறுவனமும் இணைகிறது.

Latest Videos

undefined

இது குறித்து மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்திருக்கும் லிங்டின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரியான் ரோஸ்லான்ஸ்கி, "வேகமாக மாறிவரும் சூழலில் லிங்டின்னை வழிநடத்த, ​​உலகளாவிய வணிக அமைப்பு (GBO) மற்றும் சீனா அமைப்புகளில் மாற்றங்களைச் செய்கிறோம். இதன் விளைவாக 716 பணியாளர்கள் குறைக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நம்பர்ல இருந்து போன் வந்தா.? வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

ரோஸ்லான்ஸ்கி, அதன் விற்பனை, செயல்பாடுகள் மற்றும் உதவிக் குழுக்களில் பணியாளர்களைக் குறைப்பதற்கான நடவடிக்கை, நிறுவனத்தின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும் இது விரைவான முடிவுகளை எடுக்க உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாற்றங்கள் 250 புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் பணிநீக்கம் செய்யப்பட்ட லிங்டின் ஊழியர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சீனாவில் உள்ள உள்ளூர் வேலைகளுக்கான இன் கெரியர் (InCareer) அப்ளிகேஷன் சேவையையும் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் படிப்படியாக நிறுத்த முடிவு செய்துள்ளது. “கடந்த ஆண்டில் இன் கெரியரின் சீனாவை தளமாகக் கொண்ட வலுவான குழுவிற்கு நன்றி தெரிவித்தாலும், கடுமையான போட்டி மற்றும் சவாலான மேக்ரோ பொருளாதாரத்தையும் சந்தித்துள்ளோம்" என்று ரோஸ்லான்ஸ்கி எழுதினார்.

லிங்க்ட்இன், சீனாவில் செயல்படும் நிறுவனங்களுக்கு நாட்டிற்கு வெளியே பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் பயிற்சி செய்வதற்கும் உதவும் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பணிநீக்கங்களால் பாதிக்கப்படும் ஊழியர்கள், சிறப்பு ஊதியம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறுவார்கள். அமெரிக்காவிற்கு வெளியே உள்ள ஊழியர்களுக்கான நன்மைகள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வேலைவாய்ப்பு சட்டங்கள் மற்றும் உள்ளூர் நடைமுறைகளைப் பொறுத்து மாறுபடும் என்றும் ரோஸ்லான்ஸ்கி கூறினார்.

வாட்ஸ்அப் மெசேஜை நம்பி ரூ.5 லட்சம் போச்சு! நண்பர் ஏமாந்த கதையைப் பகிர்ந்த ஜீரோதா சிஇஓ நிதின் காமத்

click me!