முதல் பேஸ்புக் அக்கவுண்டின் ஈமெயில் ஐ.டி. இதுதான்? ரகசியத்தை உடைத்த ஜூக்கர்பெர்க்!!

By SG BalanFirst Published Aug 20, 2024, 11:29 PM IST
Highlights

த்ரெட்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு உரையாடலுக்கு பதிலளித்த ஜுக்கர்பெர்க், தனது முதல் பேஸ்புக் மின்னஞ்சல்  முகவரி "mzuckerb@fas.harvard.edu" என்று கூறினார்.

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் முதல் கணக்கை உருவாக்க பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துள்ளார். 2004இல் பேஸ்புக்கின் முதல் கணக்கை பதிவு செய்ய, "zuck@harvard.edu" என்ற மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தியதாக ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

த்ரெட்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு உரையாடலுக்கு பதிலளித்த ஜுக்கர்பெர்க், தனது முதல் பேஸ்புக் மின்னஞ்சல்  முகவரி "mzuckerb@fas.harvard.edu" என்று கூறினார்.

Latest Videos

த்ரெட்ஸ் தளத்தில் ஒரு பயனர், “பேஸ்புக்கைத் தொடங்கி பல வருடங்கள் ஆகிறது. நீங்கள் ஒரு .edu மின்னஞ்சல் முகவரியை வைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த மார்க், "உண்மை.☝️என் முதல் கணக்கின் மெயில் ஐ.டி. mzuckerb@fas.harvard.edu" என்று கூறினார்.

வாட்ஸ்அப்பில் வதவதன்னு வந்து குவியும் ஸ்பேம் மெசேஜ்... முற்றுப்புள்ளி வைக்கும் புதிய அப்டேட்!!

தி கார்டியனின் அறிக்கைகளின்படி, ஜுக்கர்பெர்க்கிற்கு முன் மூன்று சோதனை கணக்குகள் உருவாக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டன. இந்தக் கணக்குகள் ஆரம்ப இயங்குதள சோதனை மற்றும் மேம்பாட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதன்படி, ஃபேஸ்புக்கில் நான்காவது பழமையான கணக்காக ஜூக்கர்பெர்க்கின் கணக்கு உள்ளது. ஐந்தாவது மற்றும் ஆறாவது கணக்குகள் ஜூக்கர்பெர்க்குடன் இணைந்து பேஸ்புக்கைத் தொடங்கிய இணை நிறுவனர்கள் கிறிஸ் ஹியூஸ் மற்றும் டஸ்டின் மாஸ்கோவிட்ஸ் ஆகியோருடையவை.

2004ஆம் ஆண்டில், ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களை இணைக்கும் தளமாக மார்க் ஜுக்கர்பெர்க் Thefacebook என்ற பெயரில் தொடங்கப்பபட்டது. பின்னர் அதன் பெயர் பேஸ்புக் (Facebook) என சுருக்கப்பட்டது. ஆரம்பத்தில், இந்த தளம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் விரைவில் பல்கலைக்கழக வரம்புக்கு அப்பாலும் அது பிரபலமானது.

விரல்நுனியில் விண்வெளி மர்மங்கள்! மொபைல் ஆப் மூலம் விஞ்ஞானிகளுக்கு உதவலாம்!!

click me!