பயனர்கள் தங்கள் பதிவுகளுக்கு வரும் பதில்களில் லிங்க் ஷேர் செய்யும் அம்சத்தை நீக்க அனுமதிக்கும் அம்சம் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளது. ரிப்ளைகளில் லிங்க் பகிர்வதைத் தவிர்த்தால், ஸ்பேம் இணைப்புகளைக் குறைப்பதற்கு பயன்படுகிறது.
எலான் மஸ்க்கை வசம் சென்ற ட்விட்டரில் பெயர் மட்டுமின்றி பல அம்சங்களும் மாறிவிட்டன. புதிய வசதிகள் சில கிடைத்தாலும், பல கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. அந்த வகையில் புதிய கட்டுபாடு ஒன்றைக் கொண்டுவர எலான் மஸ்க் முடிவு செய்துவிட்டார்.
சமீபத்திய தகவலின்படி, பயனர்கள் தங்கள் பதிவுகளுக்கு வரும் பதில்களில் லிங்க் ஷேர் செய்யும் அம்சத்தை நீக்க அனுமதிக்கும் அம்சம் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளது. ரிப்ளைகளில் லிங்க் பகிர்வதைத் தவிர்த்தால், ஸ்பேம் இணைப்புகளைக் குறைப்பதற்கு பயன்படுகிறது.
சமீபத்தில் ஐ.ஓ.எஸ். அப்ளிகேஷனில் 'டிஸ்லைக்' ஆப்ஷன் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் வெளிவந்தது. இதுவும் எக்ஸ் பதிவுகளுக்கு பதில்கள் வருவதைக் குறைக்க உதவும் என கருதுகிறார்கள்.
பாப்கான் மூளை தெரியுமா? எப்போதும் ஸ்கிரீன் பார்த்துட்டே இருக்குறவங்க இதை தெரிஞ்சுகோங்க!!
பயனர்கள் தங்கள் பதிவுகளில் இருக்கும் ஒரு செக் குறியீட்டை கிளிக் செய்து, ரிப்ளை செய்பவர்கள் லிங்க் ஷேர் செய்வதை தடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து @nima_owji என்ற ஐடியில் இருந்து ஸ்கிரீன் ஷாட்கள் பகிரப்பட்டுள்ளன.
சீனாவின் WeChat போலவே, மெசேஜ் அனுப்புவது முதல் பணம் செலுத்துவது வரை அனைத்தையும் செய்யக்கூடியதாக எக்ஸ் தளத்தை மாற்ற எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ட்விட்டரில் இருந்து எக்ஸ் என பெயர் மாறிய இந்த சமூக வலைத்தளம் புகழ்பெற்ற 'லாரி தி பேர்ட்' லோகோவையும் பறக்கவிட்டு, சிம்பிளான 'எக்ஸ்' என்ற எழுத்தை லோகோவாகப் பெற்றது.
ட்விட்டர் எக்ஸாக மாறிய பிறகு பயனர்கள் தங்கள் பதிவுகள் மூலம் சம்பாதிக்கக்கூடிய அம்சத்தைச் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியானது. அது இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால், இப்போது டிப்ஸ் கொடுக்கும் ஆப்ஷன் எக்ஸ் தளத்திற்கு வந்துவிட்டது.
நாடு முழுவதும் இலவச இன்டர்நெட் வசதி! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!