இன்ஸ்டாவில் நாசா கொண்டு வந்த 3D ஃபில்டர்! எப்படி யூஸ் பண்ணுறதுன்னு தெரிஞ்சுக்கோங்க!

By SG Balan  |  First Published Jun 6, 2024, 4:54 PM IST

வேலா பல்சர், டைக்கோவின் சூப்பர்நோவா ரெம்னண்ட், ஹெலிக்ஸ் நெபுலா, கேட்ஸ் ஐ நெபுலா போன்ற வானியல் நிகழ்வுகளின் பல அலைநீளப் படங்களை இந்த ஃபில்டர்கள் வழங்குகின்றன.


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய இன்ஸ்டாகிராம் ஃபில்டர்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. இது பயனர்களுக்கு விண்வெளியை ஆராயும் அனுபவங்களும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஃபில்டர்கள் நாசாவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம் மற்றும் பிற தொலைநோக்கிகளில் இருந்து பெறப்பட்ட தரவைப் பயன்படுத்துகின்றன.

இந்த் ஃபில்டர்கள் தொலை நோக்கி மூலம் பெறப்பட்ட விண்வெளிப் காட்சி மூலம் மெய்நிகர் விண்வெளி பயண அனுபவத்தைக் கொடுக்கிறது.

Latest Videos

undefined

சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம் தொடங்கி 25 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த ஃபில்டர் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் இப்போது ஏற்கெனவே இருக்கும் விண்வெளி தீம் கொண்ட ஃபில்டர்களின் தொகுப்பை விரிவுபடுத்தும் வகையில் இந்தப் புதுவரவு உள்ளது.

ஐபோன் 15 பயனர்களுக்கு மட்டும் அசாசின்ஸ் கிரீட் மிராஜ் வீடியோ கேம் இலவசம்! இப்பவே டவுன்லோட் பண்ணுங்க!

நாசாவின் விண்வெளி திட்டங்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் காட்சிகள் இந்த ஃபில்டர்களில் அடங்குகின்றன.  வேலா பல்சர், டைக்கோவின் சூப்பர்நோவா ரெம்னண்ட், ஹெலிக்ஸ் நெபுலா, கேட்ஸ் ஐ நெபுலா போன்ற வானியல் நிகழ்வுகளின் பல அலைநீளப் படங்களை இந்த ஃபில்டர்கள் வழங்குகின்றன.

சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம் மூலம் பெறப்பட்ட விண்வெளியின் ஒளியியல், அகச்சிவப்பு மற்றும் புற ஊதா தரவுகளை உள்ளடக்கி உள்ளன.

வானியல் இயற்பியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களுன் இணைந்து இந்த ஃபில்டர்களுக்காக துல்லியமான 3D மாதிரிகளை உருவாக்கி இருப்பதாக நாசா கூறியிருக்கிறது.

பறவைக் காய்ச்சலுக்கு முதல் பலி! மனிதர்களுக்கு ஆபத்து என எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

click me!