வாட்ஸ்அப் கணக்கைப் பாதுகாக்கவும், மொபைலின் செயல்திறனை மேம்படுத்தவும், அறிமுகமில்லாத நம்பர்களில் இருந்து இருந்து வரும் மெசேஜ்களை வாட்ஸ்அப் தானாகவே தடுக்கும்.
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் சீரான இடைவெளியில் பயனர்களுக்கு புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. சமீபத்திய அப்டேட்டில் வாட்ஸ்அப்பில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் ஸ்பாம் மெசேஜ்களைத் தடுக்க உதவும் அம்சம் கிடைக்க உள்ளது.
சோதனை கட்டத்தில் உள்ள இந்த அம்சம் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது. ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.17.24 வெர்ஷனில் இந்த அப்டேட் இருக்கிறது. இந்த அப்டேட் விரைவில் கூகுள் பிளே பீட்டா புரோகிராம் பயனர்களுக்குப் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அம்சம் வாட்ஸ்அப் கணக்கின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என்று கருதப்படுகிறது. ஐபி முகவரியைப் பாதுகாத்தல், லிங்க் பிரிவியூவை முடக்குதல் போன்ற வாய்ப்புகள் இந்த அம்சம் மூலம் கிடைக்கும். இந்த அம்சம் தீங்கு விளைவிக்கும் மற்றும் தேவையற்ற மேசேஜ்களில் இருந்து பாதுகாப்பை உறுதிசெய்யும்.
ப்ரீமியம் ஸ்டார்ட் வாட்ச் வாங்கணுமா? ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் டாப் 5 சாய்ஸ்!!
வாட்ஸ்அப் கணக்கைப் பாதுகாக்கவும், மொபைலின் செயல்திறனை மேம்படுத்தவும், அறிமுகமில்லாத நம்பர்களில் இருந்து இருந்து வரும் மெசேஜ்களை வாட்ஸ்அப் தானாகவே தடுக்கும். ஸ்பாம் மேசேஜ்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது என்று அம்சம் தானாக பிளாக் செய்துவிடும்.
ஸ்மார்ட்போனின் மெமரி மற்றும் பிராசஸரை பாதிக்கும் ஸ்பேம் மற்றும் தேவையற்ற மெசேஜ்களைக் குறைப்பதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் மேம்பட்ட அனுபவத்தை வழங்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. என்று WABetaInfo கூறுகிறது.
ஸ்பேம் கணக்குகள் பொதுவாக மெமரியை நிறைக்கும் அதிக அளவிலான மெசேஜ்களை அனுப்புகின்றன. ஸ்பேம் கணக்குகளைத் தடுப்பது, வாட்ஸ்அப் செயலின் பிராசஸிங் டேட்டா அளவைக் குறைக்க உதவும். இந்த அம்சம் பயனரின் பிரைவசியை உறுதிசெய்யும் அதே வேளையில் தீங்கிழைக்கும் தானியங்கி மென்பொருளகளைத் தடுக்கவும் உதவும்.
இந்த அம்சம் ஃபிஷிங் அபாயங்களையும் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனிடையே, மெட்டாவின் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ளதைப் போல ஸ்டேட்டஸ் அப்டேட்களை 'லைக்' செய்யும் ஆப்ஷனைக் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரிலீசுக்கு முன்பே கசிந்த ஐபோன் 16 சீரிஸ் புகைப்படங்கள்! அப்செட்டான ஆப்பிள் பிரியர்கள்!!