
நிகழ்ச்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினியை அறிந்திராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
டிடி
இவர் 5ம் வகுப்பு படிக்கும் போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவனர். அதன்பிறகு விஜய் டிவியில் ஜோடி நம்பர்1 சூப்பர் சிங்கர் பாய்ஸ் vs கேர்ள்ஸ் ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது காபி வித் டிடி ஆகும்.
சிறந்த தொகுப்பாளினி
இவருக்கு சிறந்த தொகுப்பாளினிக்கான விருதை கடந்த 2013ம் ஆண்டு விகடன் வழங்கி சிறப்பித்துள்ளது.
இவர் டிடி என்று அனைவராலும் அறியப்படுகிறார்.தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சில படங்களிலும் நடித்துள்ளார்.
திருமணம், விவாகரத்து
மேலும் 2014 ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். சுசி லீக்ஸில் டிடி யின் புகைப்படம் வந்தது, மற்றும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறியது போன்ற காரணங்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கு இந்த ஆண்டு விவாகரத்து நடைபெற்றது.
ஜீ தமிழ்
விஜய் டிவியை தவிர வேறு டிவிகளில் தலை காட்டாத டிடி தற்போது வேறு ஒரு சேனலில் தோன்றியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் டிடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
கௌதம் மேனன்
இவருடன் இயக்குனர் கௌதம் மேனனும் இந்த நிகழ்ச்சிக்கு வர ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் மேல ஷாக் தான்.
கருத்து வேறுபாடு
சில நாட்களுக்கு முன்பு டிடி க்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக செய்திகள் வெளியானது.இந்நிலையில் டிடி விஜய் டிவியின் போட்டியாக கருதப்படும் ஜீ தமிழில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.