உண்ணாவிரதத்தை எதிர்த்து உண்ணும் போராட்டம்...! ஜீயருக்கு புகைச்சலை கிளப்பும் பெரியார் கேங்...!

Asianet News Tamil  
Published : Feb 09, 2018, 02:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
உண்ணாவிரதத்தை எதிர்த்து உண்ணும் போராட்டம்...! ஜீயருக்கு புகைச்சலை கிளப்பும் பெரியார் கேங்...!

சுருக்கம்

Fight against hunger protest in covai

வைரமுத்துவை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் ஜீயரை கண்டித்து கோயம்புத்தூரில் தந்தை பெரியார் கழகத்தினர் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ராஜபாளையத்தில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள், ஸ்ரீவில்லி. ஜீயர் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் சந்நதியில் வந்து நேரில் மன்னிப்பு கேட்க வேண்டு என்று, சடகோபராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று தொடங்கிய அவரது உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்கிறது.

இதனிடையே பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க தேவையில்லை என்று ஜீயரிடம் வலியுறுத்தியுள்ளார். 

இதையடுத்து  உண்ணாவிரதம் இருக்கும் ஜீயரை பாஜகவின் எஸ்வி சேகர் நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார். 

அப்போது, மடாதிபதிகள் உண்ணாவிரதம் இருப்பதால் தான் கோயில்களில் தீ விபத்து ஏற்படுவதாகவும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தார். 

இந்நிலையில், வைரமுத்துவை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் ஜீயரை கண்டித்து கோயம்புத்தூரில் தந்தை பெரியார் கழகத்தினர் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

மிருணாள் தாகூருடன் டும்..டும்..டும்... தேதி குறித்த குடும்பம்... தனுஷின் புதுப்புது அர்த்தங்கள்..!
வாரிசு அரசியல் + ஊழல்.. திமுக அரசை விளாசித் தள்ளிய அமித்ஷா.. டிடிவிக்கு வெல்கம்!