ஆதரவற்ற பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு கம்பி நீட்ட நினைத்த இளைஞன்; போராடி சாதித்த இளம்பெண்

Published : Nov 28, 2023, 06:00 PM IST
ஆதரவற்ற பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு கம்பி நீட்ட நினைத்த இளைஞன்; போராடி சாதித்த இளம்பெண்

சுருக்கம்

காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த இளைஞரை பல்வேறு கட்ட போராட்டங்களுக்குபின் இளம் பெண் காவல் நிலையத்திலேயே திருமணம் செய்து கொண்டார்.

சென்னை இராயபுரத்தைச் சேர்ந்த கலைவாணி(வயது 20) என்ற இளம்பெண் பெற்றோர்களை இழந்து தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறார். இவர் துரைப்பாக்கம் பகுதியில் ஆர்கிடேக் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சஜின்ராஜ்ம்(27) பணி பரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 1.5 வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

மேலும் இருவரும் தனிமையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கலைவாணி கர்ப்பம் தரித்துள்ளார். இதனை சஜினிடம் தெரிவித்த நிலையில், கர்ப்பத்தை கலைத்தால் மட்டுமே வீட்டில் திருமணம் குறித்து பேசலாம் எனவே கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு தெரிவித்துள்ளார். இதனை நம்பி  கலைவாணியும் கருக்கலைப்பு செய்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் மதம் காரணமாக காதலனின் பெற்றோர் மறுப்பதாகவும், இதனால் திருமணம் செய்து கொள்ள சஜின்ராஜ் மறுத்துள்ளார். இதன் காரணமாக காதலி கலைவாணி வீட்டில் இருந்த மாத்திரைகளை உட்கொண்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இராயபுரம் காவல் நிலையத்தில் கலைவாணி தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 25 கிலோ நகைகள் கொள்ளை

இதன் காரணமாக காதலன் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அப்போது கொடைக்கானலில் காதலன் இருப்பதாகவும், திருமணத்திற்கு முன்னேற்பாடுகள் செய்யப்படுவதாகவும் காதலிக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து காதலி கலைவாணி கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் தற்போது வரை நடந்துள்ளதை குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் காதலனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து இருவரும் சமரசமாக திருமணம் செய்து கொள்கிறோம் என இருவீட்டார் தெரிவித்ததை அடுத்து காவல் நிலைய வளாகத்திற்குள் ஒருவொருக்கொருவர் மாலை மாற்றி கொண்டு, தாலி கட்டிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இருவீட்டாரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கொண்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏதோ தவறு நடக்கிறது? கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சந்தேகத்தை கிளப்பும் உச்ச நீதிமன்றம்!
விவசாயிகள் அகதிகளாக்கப்பட்டு கையேந்தும் நிலை ஏற்படும்.. விதை சட்டத்தை எச்சரிக்கும் சீமான்