காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை...!

Published : Dec 25, 2018, 05:27 PM ISTUpdated : Dec 25, 2018, 05:39 PM IST
காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை...!

சுருக்கம்

சென்னையில் காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த மாதவரத்தில் அலெக்ஸ் நகரைச் சேர்ந்த பாண்டியன். அவர் 3 வருடங்களுக்கு முன் முஹின் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. 

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாண்டியன் இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தனி அறையில் உறங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது மின் விசிறியில், முஹின் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு பாண்டியன் அதிர்ச்சியடைந்தனர். 

உடனே மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?