
கோவை ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இளம் காதல் ஜோடி, மது போதை ரகளையில் ஈடுபட்டனர். அவர்களின் இந்த செயல் காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
மது பழக்கத்துக்கு இளைஞர்களும், இளம் பெண்களும் அடிமையாகி வருவது தற்போது அதிகரித்து வருகிறது. ஒருபுறம் மதுவிலக்கு கோரி வரும் நிலையில், இன்னொரு புறம் இளைஞர்களும், இளம் பெண்களும் மது போதையால் சீரழிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், கோவை ரயில் நிலையம் அருகே மது போதை தலைக்கேறிய இளம் ஜோடி செய்த ரகளையால், அங்கிருப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இளம் ஜோடி ஒன்று, மது போதையால் நடக்கக்கூட முடியாமல் தள்ளாடியபடியே நடந்து சென்றது. அவர்கள், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், வாகன ஓட்டிகள் ஆகியோரிடம் அநாகரிகமாகவும் நடந்து கொண்டனர்.
தலைக்கேறிய மது போதையால், நடைபாதை எது, பாதை எது என்று தெரியாத அந்த இளம் பெண், சாலையோர சுவற்றில் மீது மோதி சரிந்துள்ளார். கீழே விழுந்த அந்த பெண்ணை சிலர் தூக்க முற்பட்டனர். அப்போது வாலிபர் ஒருவருடன் அந்த பெண் தகராறு செய்துள்ளார். இதையடுத்து, அந்த வாலிபர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை அறிந்த அந்த இளம் ஜோடி, தப்பித்து ஓடி விட்டது. இந்த இளம் ஜோடியின் ரகளையால் கோவை ரயில் பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.