ஆர்.கே. சாலையில் ஆயுத பூஜை கொண்டாடிய மாநகர பேருந்துகள் - ஒன்றுக்கு ஒன்று மோதியதில் கண்ணாடி சுக்கு நூறாகியது

First Published Oct 12, 2016, 1:26 AM IST
Highlights


ஆயுத பூஜை கொண்டாடும் வேலையில் சென்னை மைலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் பிரேக் பிடிக்காத பேருந்து ஒன்று இன்னொரு அரசு பேருந்தின் பின் புறம் மோதியதில் கண்ணாடி உடைந்து சிதறியது , இதனால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

சென்னை பெரம்பூரிலிருந்து பெசன்ட் நகர் செல்லும் பேருந்து தடம் எண் 29 சி பெசண்ட் நகரிலிருந்து பெரம்பூர் நோக்கி சென்று ஆர்.கே.சாலையில் கொண்டிருந்தது. அதன் பின்னாலேயே இன்னொரு அரசு பேருந்து அதுவும் 29 சி எண்ணுள்ள பேருந்து வந்துகொண்டிருந்தது. 

 ஆர்.கே.சாலையில் நீல்கிரீஸ் அருகில் வந்தபோது முன்னாள் சென்ற பேருந்து திடீரென பிரேக் போட பின்னால் வந்த பேருந்து திடீரென பிரேக் பிடிக்காமல் முன்னாள் சென்ற பேருந்து மீது டமாரென மோதியது. இதில் பலத்த சத்தத்துடன் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. 

இதனால் பயணிகள் அலறி அடித்து ஓடினர். பின்னால் வந்த பேருந்து பிரேக் பிடிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என ஓட்டுனர் தெரிவித்தார். நல்லவேலையாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. பேருந்து இன்னொரு பேருந்தின் பின் புறம் மோதாமல் வேறு ஏதாவது வாகம் மீது மோதியிருந்தால் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.

click me!