அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதலமைச்சர் நேற்று தொடங்கி வைத்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய அவர்களுடன் உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதலமைச்சர் நேற்று தொடங்கி வைத்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய அவர்களுடன் உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114வது பிறந்த தினமான நேற்று அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளிச் சிறார்களுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார் முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான புகைப்படங்கள் நேற்று திமுக ஐடி விங்கால் வைரலாக்கப்பட்டது.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக அரசு இதுவரை எத்தனையோ திட்டங்களை அறிமுகம் செய்திருந்தாலும் அது எல்லாவற்றையும் விட தலைசிறந்த திட்டமாக காலை உணவு திட்டம் மாணவர்கள் பெற்றோர்களால் வரவேற்கப்படுகிறது. அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அரசு பள்ளிகளில் காலை உணவாக கேசரி, ரவா கிச்சடி உணவுகள் வழங்கப்பட்டது அப்போது பள்ளி சிறார்களுடன் அமர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தார். அதற்கான புகைப்படங்களும் வெளியானது.
இதையும் படியுங்கள்: தமிழகத்திற்கு 4 முதலமைச்சர்கள்..? யார்? யார்? தெரியுமா..? திமுக அரசை இறங்கி அடித்த இபிஎஸ்
இது ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டிலேயே பாதியிலேயே உணவில் ஸ்டாலின் கைகழுவியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, சாப்பாட்டில் கை கழுவலாமா? இப்படி செய்த தன் மூலம் ஸ்டாலின் விவசாயிகளை அவமானப்படுத்தி விட்டார் என்றும், ஒரு திட்டத்தை தொடங்கி வைத்து விட்டு அதை தமிழக முதலமைச்சரே இப்படி அவமானப்படுத்தலாமா என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதையும் படியுங்கள்: ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் அமைச்சர்களின் கமிஷன்.? ஒன்றரை ஆண்டில் 50ஆயிரம் கோடி கொள்ளை- எஸ்.பி.வேலுமணி ஆவேசம்
இது ஒருபுறம் உள்ள நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார், அப்போது தூத்துக்குடி மாநகராட்சி டூவிபுரம் தொடக்க பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கனிமொழி எம்பி சிற்றுண்டி பரிமாறினார், அதன்பிறகு கனிமொழி மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உப்புமா சாப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றினார். தற்போது இதற்கான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக திமுக திட்டங்களை விட அதற்கு விளம்பரம் செய்வதிலேயே கவனமாக இருக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.