மக்களே உஷார்... இந்த 3 நாட்களுக்கு வெப்ப அலை உக்கிரமாக இருக்குமாம்.. தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!

By vinoth kumarFirst Published Apr 30, 2024, 10:03 AM IST
Highlights

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்த வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கோடை வெயில் நாள்தோறும் வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர்.

தமிழகத்தில் மே 2, 3,4 ஆகிய தேதிகளில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்த வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கோடை வெயில் நாள்தோறும் வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. 

இதையும் படிங்க: Tamilnadu Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் எந்ததெந்த மாவட்டத்தில் மழை பெய்யப்போகுது தெரியுமா?

ஒரு புறம் கோடை வெயில் கொளுத்துவதோடு மட்டுமல்லாமல் மறுபுறம் வெப்ப அலையும் நெருப்பாக வீசி வருகிறது. இதனிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:  தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. 

அடுத்த 3 தினங்களுக்கு வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில், ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் மே 2 மற்றும் 3-ம் தேதிகளில், தமிழக வட உள் மாவட்டங்களில், சமவெளி பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும் என தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசும் என்பதால் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரித்தே காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

click me!