ட்ரம்பின் கிறுக்குதனத்தால் கொத்து கொத்தாக வேலை இழப்பு.? திருப்பூரில் கதறும் தொழிலாளர்கள்

Published : Aug 28, 2025, 02:20 PM IST
America President Donald Trump

சுருக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதித்துள்ளதால், திருப்பூர் ஜவுளித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

Workers in Tiruppur affected by Trump's tax : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணமாகக் காட்டி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதித்துள்ளார். இந்த வரி, ஏற்கனவே இருந்த 25% வரியுடன் கூடுதலாக 25% என்று மொத்தம் 50% ஆக உயர்த்தப்பட்டது. 

குறிப்பாக ஜவுளி, ஆடைகள், நகை, தோல், இறால் போன்ற தொழில்கள் பாதிப்படையும். இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி மையங்களில் ஒன்றான திருப்பூர் இந்த வரியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஜவுளித் தொழில், அமெரிக்காவுக்கு 40-45% ஏற்றுமதி செய்கிறது. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

இந்தியா மீது 50% வரி விதிப்பு

"இந்தியாவின் ஜவுளி தலைநகரம்" என்று அழைக்கப்படும் இடம். இங்கு 10 லட்சம் தொழிலாளர்கள் (65% பெண்கள்) ஸ்பின்னிங், நெசவு, டயிங், ஸ்டிச்சிங், பேக்கேஜிங் என ஜவுளி சங்கிலி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழிலாளர்கள். வேலை இழப்பு தொடர்பாக திருப்பூர் தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் திருப்பூர் அதிக வருடங்கள் ஆகிறது ஜவுளித்துறையை நம்பிய எங்களது வேலை உள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரியால் தொழில்துறை பாதிக்கும் அபாயம் உள்ளது. திருப்பூரில் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலை நீடித்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும்.மத்திய மாநில அரசுகள் அனைத்து உடனடியாக எங்கள் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும். முன்பெல்லாம் இரண்டு ஷிப்ட்வேலை செய்து கொண்டிருந்தோம் தற்பொழுது ஒரு ஷிப்ட் மட்டுமே வேலை உள்ளது.

கதறும் திருப்பூர் தொழிலாளர்கள்

35 ஆண்டுகளாக திருப்பூரில் தொழில் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50% வரி விதிப்பால் தொழில்துறையே முடங்கும் அபாயம் உள்ளது. எங்களுக்கு வேலை குறைந்தே உள்ளது . தொடர்ந்து இதேபோல நிலைமை நீடித்தால் மக்களின் வாழ்க்கை கடனில் தான் . மேலும் வாழ்வாதாரம் பாதிக்கும் மத்திய மாநில அரசுகள் இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். 7 லட்சம் பேர் வேலை  சொந்த ஊருக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.அரசு மற்றும் தொழில் துறையினர் விரைவில் நல்ல தீர்வு எட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக கூட்டணியில் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!
அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!