7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தச்சு தொழிலாளி கைது...

First Published Jul 13, 2018, 12:16 PM IST
Highlights
worker arrested for abuse 7 years girl


திருப்பூர் 

திருப்பூரில் 7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தச்சு தொழிலாளியை காவலாளர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், வீரபாண்டியை அடுத்த கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (49). தச்சு வேலை செய்து வரும் இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

அப்போது வீரபாண்டியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவியான அமுதா (7) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு சாக்லெட் கொடுத்து அழைத்துள்ளார். சுப்ரமணி வைத்திருந்த சாக்லெட்டை வாங்குவதற்கு அருகில் வந்த அந்த அமுதாவை பிடித்து இழுத்து தவறாக நடந்துள்ளாராம். 

சுப்ரமணியின் பிடியில் இருந்து விடுபட முயன்றும் அமுதாவால் முடியாததால் அழ ஆரம்பித்தார். அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது, சுப்ரமணி, அமுதாவிடம் தகாத முறையில் நடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அவரை எச்சரித்தனர். 

இதனால் பயந்துபோன சுப்ரமணி அங்கிருந்து ஓடிவிட்டார். இதனையடுத்து அமுதாவின் பெற்றோர் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். பின்னர், சுப்ரமணியை போக்சோ சட்டத்தில் காவலாளர்கள் கைது செய்தனர். 

click me!