2 ஆவது மாடியில் இருந்து குதித்த லோகேஸ்வரி ..! அதிர்ச்சி வீடியோ உள்ளே..!

Asianet News Tamil  
Published : Jul 13, 2018, 11:50 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
2 ஆவது மாடியில் இருந்து குதித்த லோகேஸ்வரி ..! அதிர்ச்சி வீடியோ உள்ளே..!

சுருக்கம்

the video which consist of student logeswari jumped from 2nd floor

தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 2 ஆவது மாடியில் இருந்து குதித்த மாணவி தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிர் இழந்தார்.

கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது.

அப்போது, 3 மாடிகளை கொண்ட இந்த கல்லூரியில் 2-வது மாடியில் இருந்து மாணவி கீழே குதிக்க முற்பட்டார்.

அப்போது முதல் மாடியில் தலை பலமாக அடிப்பட்டு வலையில் விழுந்தார்.பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார்

இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.

லோகேஸ்வரி உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை.பயிற்சியின்போது மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம்  தெரிவித்து  உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

மறைந்தும் வாழும் கருப்பு எம்.ஜி.ஆர்.. 'கேப்டன்' விஜயகாந்த் நினைவிடத்தில் குவியும் அரசியல் தலைவர்கள்!
சென்னை டூ ராமேஸ்வரம் புதிய ரயில் வந்தாச்சு.. பயணிகளுக்கு குட் நியூஸ்! முழு விவரம் இதோ!