இந்த ஆட்சியின் அவலட்சணத்தை யார் எடுத்துரைப்பது? பெண்களே திமுக அரசை நம்பி இனி பயனில்லை! வானதி சீனிவாசன்!

Published : Feb 06, 2025, 08:30 AM ISTUpdated : Feb 06, 2025, 09:47 AM IST
இந்த ஆட்சியின் அவலட்சணத்தை யார் எடுத்துரைப்பது? பெண்களே திமுக அரசை நம்பி இனி பயனில்லை! வானதி சீனிவாசன்!

சுருக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 65 மாணவர்கள், 75 மாணவிகள் என மொத்தம் 140 பேர் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இதுதொடர்பாக சக மாணவ, மாணவியிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து சரியான பதில் கிடைக்காததால் தலைமை ஆசிரியை மாணவியின் வீட்டுக்கே சென்றுள்ளார்.

அந்த சிறுமியின் பெற்றோரிடம் சென்று ஏன் ஒரு மாதமாக பள்ளிக்கு அனுப்பவில்லை என்று கேட்டுள்ளார். அப்போது அந்த மாணவியின் பெற்றோர், மகள் கர்ப்பமடைந்துவிட்டதாகவும், கருக்கலைப்பு செய்ததால் பள்ளிக்கு அனுப்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.  இதனை சற்றும் எதிர்பாராத தலைமை ஆசிரியை அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக பள்ளி மாணவியிடம் விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. 

இதையும் படிங்க: ஊருக்கு உபதேசம் செய்யும் கனிமொழி! தெருவுக்கு தெரு டாஸ்மாக்! உங்கள் சொந்த குடும்பத்தை முதலில் தட்டிக் கேளுங்கள்

தனது கர்ப்பத்திற்கு காரணம், அதே பள்ளியில் ஆசிரியர்களாக உள்ள பாரூர் சின்னசாமி (57), மத்தூர் ஆறுமுகம் (48), வேலம்பட்டி பிரகாஷ் (37) ஆகியோர்தான் என்றும் அவர்கள் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் (சைல்டு லைன்) புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தினரும், சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவர்களின் புகாரின்படி பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.  கைதான 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு சொந்த மாநிலப் பெண்களையும், நம்மை நாடி வரும் மற்ற மாநிலப் பெண்களையும் காக்கத் தவறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது ஆட்சியின் அவலட்சணத்தை யார் எடுத்துரைப்பது? என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கிருஷ்ணகிரி மாவட்டம் அருகேயுள்ள ஒரு அரசுப்பள்ளியில் 13  வயது சிறுமி அப்பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுமையையும், கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய வாயிலில் பேருந்துக்காக காத்திருந்த வேற்று மாநில இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவத்தையும் கேள்வியுற்று மிகுந்த மன வேதனையடைந்தேன். 

சொந்த மாநிலப் பெண்களையும், நம்மை நாடி வரும் மற்ற மாநிலப் பெண்களையும் காக்கத் தவறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது ஆட்சியின் அவலட்சணத்தை யார் எடுத்துரைப்பது? பெருகிவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்காமல், தங்கள் கையாலாகாத ஆட்சியின் மீது விழும் பழியைத் துடைப்பதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்துபவரிடம் நமது குமுறல்கள் எடுபடுமா? 

வழிதவறிய 13 வயது சிறுமியை போலீஸ் பூத்தில் வைத்து வன்கொடுமை செய்யும் காவலர்களைக் கொண்ட இந்த ஆட்சியில், புகாரளித்த பெண்களின் விவரங்களைப் பொதுவில் வெளியிட்டு பழிதீர்க்கும் இந்த நிர்வாகத்தில், போதைப்பொருள் கடத்துபவர்களுக்கும் பெண்களைப் பாலியல் கொடுமை செய்பவர்களுக்கும் கட்சிப் பொறுப்பு கொடுக்கும் முதல்வரிடன் பெண்களுக்கான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியுமா? என வானதி சீனிவாசன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!