திருச்செந்தூர் சென்றபோது வேகத்தால் நிகழ்ந்த சோகம்... தலைகுப்புற கவிழ்ந்த வேன் - பெண் பரிதாப பலி

By Ganesh AFirst Published Oct 1, 2023, 11:41 AM IST
Highlights

கோவில்பட்டி எட்டையபுரம் சாலையில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள துரைசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட 12 சிறுவர்கள் உட்பட  30க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு அங்கிருந்து வேனில் சென்றுள்ளனர். வேனை சிவகாசி வடக்குத்தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் செல்வக்குமார் (32) என்பவர் ஓட்டிவந்துள்ளார். 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் நெடுஞ்சாலையில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்த போது  வேகத்தடை இருப்பதை அறியாமல் வேகமாக வந்த வேன் தூக்கி வீசப்பட்டு ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதில் துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (58) என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.  பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்யா, மற்றும் போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தொடர்ந்து படுகாயமடைந்த 3 நபர்களை மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பஞ்சவர்ணத்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சாலையின் நடுவே கவிழ்ந்த வேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...குன்னூர் பேருந்து விபத்து.. 8 பேர் பலியான சோகம்.. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு - டிஐஜி சரணவசுந்தர் தகவல்!

click me!