திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய போலீஸ்காரர் - பெண் போலீஸ் திடீர் தர்ணா போராட்டம்

Asianet News Tamil  
Published : Mar 13, 2017, 11:46 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய போலீஸ்காரர் - பெண் போலீஸ் திடீர் தர்ணா போராட்டம்

சுருக்கம்

woman police cheated by a policeman

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (35). கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் மலர்செல்வன். தர்மபுரி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் போலீஸ்காரராக உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் மலர்செல்வனும், ராஜேஸ்வரியும் 

வேலை பார்த்தனர். அப்போது, அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.

இதைதொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவர்கள், சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். கிருஷ்ணகிரியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, மலர்செல்வன் 

தன்னை ஏமாற்ற முயல்வதாக ராஜேஸ்வரிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து ராஜேஸ்வரி, தன்னை காதலித்து ஏமாற்றியதாக மலர்செல்வன் மீது கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், மலர்செல்வனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்தது. இதையொட்டி, திருமண வரவேற்பு நிகழ்ச்சி, அரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதை 

அறிந்ததும், ராஜேஸ்வரி கடும் அதிர்ச்சியடைந்தார்.

உடனே ராஜேஸ்வரி தனது குடும்பத்தினருடன் அரூருக்கு சென்றார். அங்கு திருமண மண்டபம் முன் அனைவரும் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது சுய மரியாதை திருமணம் செய்து கொண்ட மலர் செல்வன், தன்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க 

வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அறவழி மற்றும் சாகும்வரை உண்ணாவிரதம் என்று குறிப்பிபட்டு இருந்த பேனரை அருகில் வைத்து இருந்தனர்.

தகவலறிந்து அரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ராஜேஸ்வரியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது, 

ராஜேஸ்வரியின் புகாருக்கு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் போலீஸ் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு வாக்குறுதி கொடுத்த இபிஎஸ்... வேட்டு வைக்கும் ராமதாஸ்..! அதிமுகவுக்கு ரூட் கொடுக்கும் திருமா..!
காவல் துறையை பார்த்து குற்றவாளிகளுக்கு அச்சமில்லை.. முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்