
மதுரையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் செல்போனுக்காக, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மஹால் 7-வது தெருவில் வசித்து வருபவர் நாகராஜ். இவர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்கூடத்திற்கு செல்லும் வழியில், செல்போனில் பேசிக் கொண்டு சென்றிருந்த நாகராஜை வழிமறித்துள்ளனர். இவரிடம் இருந்த செல்போனை பிடுங்கும்போது, நாகராஜ் அதனை இறுக்கமாக பிடித்துள்ளார். அப்போது அந்த மர்ம கும்பல் கத்தியால் நாகராஜை சரமாரியாக குத்திவிட்டு, செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.
கத்தியால் குத்தப்பட்ட நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். செல்போனுக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறேதும் காரணம் இருக்கிறதா? என்று தீவிர விசாரணையில் காவலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்..