
ஈரோட்டில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்துக்கொண்டு “நானும் ரௌடிதான்” என்று திரிந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கெம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் வேட்டையன். இவர் துப்பாக்கி வைத்துக் கொண்டு ஊரில் வலம் வந்து கொண்டிருந்தார். இதுகுறித்து காவலாளர்களிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வேட்டையனிடம் இருக்கும் துப்பாக்கிக்கு உரிமம் கேட்டனர்.
அதற்கு வேட்டையன் தன்னிடம் உரிமம் இல்லை என்று கூறியுள்ளார்.
உடனே, காவலாளர்கள் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததற்காக வேட்டையனை கைது செய்தனர்.
மேலும், துப்பாக்கி எங்கிருந்து பெறப்பட்டது? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்துக் கொண்டு ஊரில் “நானும் ரௌடிதான்” என்று திரிந்து கொண்டிருந்தவரை கைது செய்ததை மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.