தஞ்சாவூரில் சகோதரனை விடுவிக்கக்கோரி காவல் நிலையம் முன்பு சகோதரிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தனர். இதில் ஒரு சகோதரி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணைக்காக அண்ணனை அழைத்து சென்ற போலீஸ்
தஞ்சாவூர் மாவட்டம் நடுகாவிரியை சேர்ந்தவர் அய்யா தினேஷ் (32) இவரை விசாரணைக்காக நடுக்காவிரி காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த சகோதரிகள் கீர்த்திகா (29), மேனகா (31) காவல் நிலையத்திற்கு தனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவரை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: கோவை மட்டுமல்ல இந்த மாவட்டங்களிலும் கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம் மழை! வானிலை மையம்!
காவல்நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலை
அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் சகோதரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசாரை கண்டித்து சகோதரிகள் கீர்த்திகா(29), மேனகா (31) இருவரும் காவல்நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரையும் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்! சென்னையில் ஜிம் பயிற்சியாளரால் துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்! கதறிய குடும்பம்! நடந்தது என்ன?
சிகிச்சை பலனின்றி சகோதரி உயிரிழப்பு
இதில் சிகிச்சை பலனின்றி சகோதரி கீர்த்திகா தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல் நிலையம் முன்பு சகோதரிகள் விஷம் குடித்ததில் ஒருவர் உயிரிழந்து மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.