
ஐடி பெண் ஊழியர் ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கி, வன்புணர்வுக்கும் ஆளாக்கி, 15 சவரன் நகை, ஐபோன் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக்கரனை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் 30 வயதுடைய பெண். சென்னையை அடுத்துள்ள நாவலூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். நாவலூர் அருகில் உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், அந்த பெண் தனது இருசக்கர வாகனத்தில் தாழம்பூர் - பெரும்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெண்ணின் பின்பக்க தலையில் பலமாக அடித்துள்னர். இதில், நிலைதடுமாறிய அந்த பெண் சாலையில் விழுந்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்த அந்த பெண்ணிடம், சாலையோரம் உள்ள காலி இடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்பு, அந்த பெண் அணிந்திருந்த 15 சவரன் தங்க செயின், விலை மதிப்புள்ள ஐபோன் ஆகியவற்றை அவர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
மயக்க நிலையில் இருந்த அந்த பெண் இரவு முதல் சாலையோரத்தில் கிடந்துள்ளார். காலையில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனைப் பார்த்துவிட்டு பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.