
அரசு மருத்துவமனை பெண் மருத்துவர்கள், தகாத வார்த்தையால், நர்ஸ் ஒருவரை திட்டியதால் மனமுடைந்த நர்ஸ், தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாலா (25). திருப்பூர், வெள்ளக்கோயில் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 வருடமாக பயிற்சி செவிலியராக மணிமாலா பணிபுரிந்து வந்துள்ளார்.
அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள் தமயந்தி, சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகிய இரண்டு பேரும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இதன் பின்னர், அந்த இரண்டு மருத்துவர்களும், மணிமாலாவை மோசமான வார்த்தைகளால் பேசியதாக கூறியுள்ளனர். இதில் மன உளைச்சலுக்கு ஆளான மணிமாலா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மணிமாலாவின் தற்கொலைக்கு காரணமான மருத்துவர்கள் தமயந்தி, சக்தி அகிலாண்டேஸ்வரி இருவரையும் கண்டித்து, மணிமாலாவின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் இருவரையும் பணிநீக்கம் செய் வேண்டும் என்றும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மணிமாலாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பிறகு, அவர்கள் சாலையோரமாக அமர்ந்து போராட்டம் நடத்தினர்