கணவர் என்று தெரியாமலேயே சிகிச்சை அளித்த செவிலியர் மனைவி..! சோகத்தில் மூழ்கிய மருத்துவமனை ..!

By thenmozhi gFirst Published Sep 24, 2018, 3:11 PM IST
Highlights

ஓமலூர் அரசு மருத்துவமனையில், விபத்தில் அடிப்பட்டு படு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தன் கணவர் என்று தெரியாமலே, செவிலியர் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் சோகத்தில் முடிந்தது.

ஓமலூர் அரசு மருத்துவமனையில், விபத்தில் அடிப்பட்டு படு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தன் கணவர் என்று தெரியாமலே, செவிலியர் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் சோகத்தில் முடிந்தது.

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த ராமணியூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் திமுக வில் உள்ளார். இவரது மனைவி ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் புளியம்பட்டியில் தனது உறவினர் வீட்டில், தனது அக்காவான பூங்கோதையை விட்டுவிட்டு வீடு திரும்பி உள்ளார்.அப்போது, வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, செல்போனில் பேசிய வாறு நின்று உள்ளார்.

அப்போது, பின்னால் வந்த கார், சீனிவாசன் மற்றும் அவரது வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் சீனிவாசனுக்கு, பயங்கர அடிபட்டு உள்ளது. இதனை கவனித்த அருகில் இருந்தவர்கள் அவரை மீது  ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு முதலுதவி அளித்தபின், தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்து சென்றனர்.

அப்போது சீனிவாசன் விரலில் இருந்த திமுக மோதிரத்தை பார்த்த உடன் தனது கணவரின் மோதிரம் போல் உள்ளதே என, அவர் தலையில் சுற்றப்பட்டு இருந்த டிரஸ்சிங் எடுத்து விட்டு பார்த்து, அவர் தன் கணவர் தான் என அறிந்த உடன் கதறி அலுத்து உள்ளார் 


 செவிலியர் ஆடையுடன், மருத்துவமனையில் தன் கணவரை பார்த்து அழுத அந்த சம்பவம் காண்போரையும் மிகவும் வருத்தமடைய செய்தது. ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறி விட்டனர். 

click me!