பள்ளி மாணவர்களுக்கு 'குட்' நியூஸ்... தமிழக அரசு 'அதிரடி' உத்தரவு..!!

By Raghupati RFirst Published Jan 20, 2022, 10:34 AM IST
Highlights

பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சத்துணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உணவுப் பொருட்களை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 5 முட்டைகளையும் சேர்த்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஜனவரி மாத‌த்திற்கான வேலை நாட்களை கணக்கிட்டு பொருட்களை விநியோகிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுப்பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முதலில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பள்ளிகள் நடத்தப்பட்டு வந்தது. அதேபோல் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வாயிலாக பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இதுகுறித்து கல்வியாளர்கள் பலர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

click me!