புதுச்சேரியில் மதுக்கடைகளை எரித்த பொதுமக்கள் - "இங்கேயும் ஆரம்பிச்சிட்டாங்களா?" : குடிமகன்கள் வேதனை!!

First Published May 24, 2017, 12:50 PM IST
Highlights
wine shops attacked and burnt down in puducherry


கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு, பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இதையொட்டி, நாடு முழுவதும் மாநில மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.

இதற்கிடையில், அகற்றப்பட்ட கடைகள் நகர் பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில், புதிய கட்டிடம் கட்டி திறக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்துவதுடன், கடைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். இதனால், டாஸ்மாக் கடையில் வேலை செய்பவர்கள், உயிரை கையில் பிடித்து கொண்டு தினமும் வந்து செல்கின்றனர்.

தமிழகத்தில் இதுபோன்று போராட்டங்கள் நடத்துவதால், குடிமகன்கள் புதுச்சேரிக்கு சென்று enjoy செய்ய முடிவு செய்தனர். தற்போது, அவர்களது enjoy கனவிலும், எண்ணத்திலும் மண்ணை வாரி போட்டுவிட்டது.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையொட்டி இன்று சொரியங்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடையை பெண்கள் உள்பட 50க்கு மேற்பட்டோர் திரண்டு அடித்து உடைத்தனர். பின்னர் அங்கிருந்த 3 கடைகளுக்கு தீ வைத்து எரித்தனர். இதனால், அப்பகுதியே கலவர பூமியாக மாறிவிட்டது.

மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க அங்குள்ள 10 மதுக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மாநிலத்துக்கு மாநிலம் மதுக்கடைகளை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்துவதால், குடிமகன்கள் கடும் துயரத்தில் மூழ்கிவிட்டனர்.

click me!